எதிர்நீச்சல்: குணசேகரன் மீது கோபத்தில் தர்ஷன்.. ஜீவானந்தத்தோடு தொடர்புபடுத்திய தர்ஷினி..ஈஸ்வரி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 17ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஈஸ்வரி தர்ஷனுக்கு புது பைக் வாங்கி கொடுத்ததை வைத்து கதிர் பிரச்சினை செய்கிறார்.

அதைத்தொடர்ந்து தர்ஷினி நமக்கு ஜீவானந்தமே அப்பாவாக வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 Ethirneechal Serial 2023 September 17th promo full update

நேற்றைய எபிசோடில் தர்ஷன் குணசேகரன் பணத்தில் நான் காலேஜுக்கு பீஸ் கட்ட மாட்டேன் என்று சொன்னதை தொடர்ந்து கதிர் தர்ஷன் போட்டிருந்த செயினை கழட்டி, அவர் வைத்திருந்த செல்போனையும் பைக் சாவி வாட்ச் என எல்லாவற்றையும் பிடுங்கி இருந்தார். அதை தொடர்ந்து ஈஸ்வரி தர்ஷனை கூட்டிட்டு போய் அவருக்கு பிடித்த பைக் வாங்கி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் தர்ஷன் பைக்கோடு வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து ஞானம், கதிர், தர்ஷனை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது ஞானம் 13 வயசுல எங்க அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டாரு. அதுக்கு பிறகு எங்க அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து இருக்காருன்னு தெரியுமா? என்று கேட்க, அதற்கு தர்ஷன் "உங்க அப்பா செத்து கஷ்டப்படுத்தினாரு, இந்த ஆளு உயிரோட இருந்து கஷ்டப்படுத்திட்டு இருக்காரு" என்று ஆவேசமாக பேசுகிறார்.

 Ethirneechal Serial 2023 September 17th promo full update

அதற்கு கோபத்தில் ஞானம் தர்ஷனை அடிக்க மொத்த குடும்பமும் வாசலிலே சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து தர்ஷனும் தர்ஷினியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தர்ஷன் நான் ஜீவானந்தம் சாரை பார்த்தேன் என்று சொல்ல அதற்கு தர்ஷினி நமக்கு அப்படி ஒருத்தரு அப்பாவா கிடைச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று பேசிக் கொண்டிருக்க அதை கதிர் கேட்டு விடுகிறார்.

அதனால் கோபமாகி ஏய் என்று கத்தி விடுகின்றனர். அதனால் மொத்த குடும்பமும் அங்கு வந்துவிட, ஈஸ்வரியிடம் கதிர் கண்ட கண்டவன் எல்லாம் பத்தி பேசி புள்ளைங்களை ஏத்தி விட பாக்குறியா? என்று கேட்கிறார். அதற்கு கண்கலங்கி அழுதப்படியே ஈஸ்வரி "நாங்க எங்க மனசுல இருக்கிறத பேசுறதுக்கு எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு" என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது.

 Ethirneechal Serial 2023 September 17th promo full update

அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் மாடியில் குணசேகரன் நிற்பது போன்று காட்சிகள் இருந்தது. ஆனால் இன்று குணசேகரன் வருவாரா? அல்லது இவர்களுடைய சண்டை மட்டும்தான் நடக்குமா? என்றும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. அதுபோல அதிகமான ரசிகர்கள் கதிர் தன்னுடைய அண்ணியிடம் மரியாதை இல்லாமல் பேசும் வார்த்தைகளை வைத்து திட்டி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இப்போதும் அதிகமான ரசிகர்கள் மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+