எதிர்நீச்சல்: ஜீவானந்தம் ஈஸ்வரியை காதலித்ததை தெரிந்து கொண்ட குணசேகரன்..அதிர்ச்சியில் எடுத்த முடிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த ஜீவானந்தம் காதல் ரகசியம் குணசேகரனுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதை தெரிந்து கொண்ட குணசேகரன் இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் இருக்கையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ஜீவானந்தத்தின் குழந்தையை பார்க்க சென்ற நந்தினி கதறி அழுதது குறித்து ஜீவானந்தத்திற்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதே நேரத்தில் ஜனனியும் நீங்க அப்பத்தாவுக்கு உதவி செய்யப் போய் தானே இன்னைக்கு உங்க மனைவியை இழந்துட்டு நிக்கிறீங்க என்று சொல்ல ஜீவானந்தம் என் மனைவியை கொன்னவங்க வேறு, நான் அப்பத்தாவுக்கு செஞ்ச உதவி வேறு என்று கூறியிருப்பார்.
அதே நேரத்தில் ஜீவானந்தத்தின் மகள் ஈஸ்வரியிடம் நீங்க எங்க அம்மாவை போலவே இருக்கீங்க என்று சொல்ல ஈஸ்வரி அந்த குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்வார். இப்படியாக இருக்கையில் ஜீவானந்தம் தான் ஆரம்பத்தில் ஈஸ்வரியை காதலித்ததற்காக ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். அதே நேரத்தில் நந்தினியின் அப்பா திடீரென்று குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி அப்பாவை தொடர்ந்து ஈஸ்வரியின் அப்பாவும் குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் குணசேகரனிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு நந்தினி ரேணுகா அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது எங்க வந்து என்னத்த பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு கொஞ்சம் கூட தெரியாதா உங்களுக்கு என்று விசாலாட்சி ஈஸ்வரியின் அப்பாவை அவரை திட்டுகிறார்.
இந்த நிலையில் ஈஸ்வரியின் அப்பா சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் வீட்டு வாசலில் குணசேகரன் அமர்ந்திருக்க, இங்கு நடந்ததை பற்றி ரேணுகா ஈஸ்வரிக்கு போன் போட்டு சொல்கிறார். அதில் "ஈஸ்வரியை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு கேட்ட அந்தப் பையன் தான் ஜீவானந்தம்" என்று ஈஸ்வரியின் அப்பா சொன்னதாக சொல்ல ஈஸ்வரியும் அதிர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இனி ஜீவானந்தம் கதையை சொல்லி ஈஸ்வரியை குணசேகரன் கொடுமைப்படுத்த போகிறாரா? அல்லது ஈஸ்வரியை விவாகரத்து செய்யப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இது குறித்து இன்றைய எபிசோடில் குணசேகரனின் அலப்பறையை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications