எதிர்நீச்சல்: ஜோசியர் சொன்ன அதிர்ச்சி உண்மை.. என்ட்ரியாகும் அண்ணன்.. தம்பிகளில் யாரு டூப்?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடு சற்றும் எதிர்பார்க்காத வகையில் குணசேகரனுக்கு ஒரு அண்ணன் இருப்பதாக ஜோதிடர் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் குணசேகரின் தம்பிகள் விஷயத்திலும் ஜோதிடர் சொன்ன வார்த்தையை கேட்டு கதிர் மற்றும் ஞானம் ஆடிப் போயிருக்கின்றனர்.

இந்த நிலையில் சற்று எதிர்பார்க்காத பல உண்மைகள் இனி அடுத்தடுத்து வர இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் ஞானமும் கதிரும் வீட்டு வாசலில் ஆடிட்டருக்காக காத்துக் கொண்டிருக்கும் போது கரிகாலன் கேட்டுக்கு வெளியே வந்து ரோட்டில் ஆடிட்டரை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஆடிட்டர் வருவதைப் பார்த்து வீட்டிற்குள் ஓடி வந்து மாமா மாமா வந்துட்டாரு என்று சொல்ல, எல்லோரும் குணசேகரன் தான் வந்துவிட்டார் என்று சந்தோஷப்பட அங்கே மாமா ஆடிட்டர் வந்துட்டாரு என்று சொன்னேன் என்று கரிகாலன் சொல்ல அதற்கு ஞானம் மற்றும் கதிர் திட்டுகின்றனர்.

அப்போது ஆடிட்டர், நேற்று இரவு குணசேகரன் என்னை பார்க்க வந்தாரு. அப்போ சொத்தை எல்லாம் பிரிச்சி எழுத சொன்னாரு. என்னுடைய தம்பி கதிர் மற்றும் ஞானத்திற்கு என்று சில சொத்துக்களையும், அம்மாவிற்கு என்று சில சொத்துக்களையும் தன்னால் வீட்டிற்குள் வந்த கரிகாலனுக்கு என்று சில சொத்துக்களையும் குணசேகரன் எழுதி வைத்திருப்பதாக சொல்ல எல்லோரும் ஆடிட்டரை திட்டுகின்றனர்.
நீங்க அண்ணன் இப்படி பேசும்போது எங்களுக்கு ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லி இருக்கலாம் தானே என்று சொல்ல, நான் சொன்னால் மட்டும் நீங்கே எப்பவாவது கேட்டு இருக்கீங்களா? நான் எதை சொன்னாலும் நீங்க என்னை கேவலப்படுத்தி நக்கல் செய்றீங்க. அதனாலதான் நான் சொல்லல என்று அவர் சொல்ல அதற்கு கதிர், ஞானம், கரிகாலன், விசாலாட்சி, ஆதிரை என அழுது கொண்டிருக்கின்றனர்.

அப்போது கரிகாலன், குணசேகரன் மாமா, என்ன ஒரு ஆளா மதிச்சு இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தியே ஐயா, உன்ன புரிந்து கொண்டவர்களுக்கு நீ உசுரு, புரியாதவங்களுக்கு நீ புதிர், உன் குரல் எனக்கு கேட்டுகிட்டே இருக்கு என்று அழுது கொண்டு இருக்க அப்போது விசாலாட்சி என்ன அவன் செத்தா போயிட்டான். வருவான் என் பிள்ளை. நீ இப்படி அழாத என்று திட்டுகிறார். அதைத் தொடர்ந்து தர்ஷனை ஞானம் உங்களால தான் எங்க அண்ணன் இந்த முடிவு எடுத்துட்டாரு என்று திட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து விசாலாட்சி ஞானம் மற்றும் கதிர் மூவரும் ஜோசியரிடம் குணசேகரனின் ஜாதகம் எழுதி வைத்த ஓலைச்சுவடியை கொண்டு கொடுக்கின்றனர். அப்போது அவர் குணசேகரனின் அம்மா அப்பா அவருடைய மனைவி என எல்லாருடைய பெயரையும் சொல்லி கடைசியில் குணசேகரனுடன் பிறந்தது மூன்று சகோதரர்கள், ஒரு தங்கச்சி என்று சொல்கின்றனர். அதைத்தொடர்ந்து அவர் இரண்டாவதாக விசாலாட்சிக்கு பிறந்திருக்க வேண்டும் என்று சொல்ல, அதை கேட்டு கதிர் மற்றும் ஞானம் அதிர்ச்சியாகின்றனர். விசாலாட்சி அதிர்ச்சியோடு எதுவும் சொல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார். இப்படியாக எபிசோடு முடிவடைந்தது.

இந்த நிலையில் குணசேகரனுக்கு ஏற்கனவே மூன்று தம்பிகள் இருப்பது போன்று தான் இதுவரைக்கும் காட்சிகள் வந்தது. ஆனால் அவரோடு பிறந்தது மூன்று சகோதரர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் குணசேகரன் இரண்டாவது பிறந்திருக்கிறார் என்றால் அவருக்கு அண்ணன் ஒருவர் இருக்கிறார். அப்படி என்றால் கதிர், ஞானம், சக்தி மூவரில் யார் அவருடைய தம்பி இல்லை என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் இனி சீரியல் முன்பை விட அதிகமான விறுவிறுப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications