எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு பதிலாக வீட்டுக்கு வந்த இடி..மரண பயத்தில் நந்தினி, ரேணுகா..ஆட்டம் ஆரம்பம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 22ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டிற்குள் ஒரு கார் புதியதாக வர அதைப் பார்த்த மொத்த குடும்பமும் பயத்தில் இருக்கின்றனர்.

அப்போது கரிகாலன் அடுத்த இடி வந்துவிட்டது என்று சொல்லி கத்துகிறார். அந்த வகையில் இனி என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பிய பிறகு அடுத்து என்ன நடக்கப் போகிறது எதிர்பார்ப்போடு கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று காலமான பிறகு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் வருவாரா? அல்லது குணசேகரன் கேரக்டரை இறந்து போனது போன்று காட்டுவார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் இப்போது குணசேகரனுக்கு ஒரு அண்ணன் இருந்தார் என்பது போன்று விசாலாட்சி ஜோதிடரிடம் உண்மையை உடைத்திருக்கிறார். இந்த நிலையில் இனி குணசேகரன் கேரக்டர் இறந்து போவது போக்குக்காட்டி அவரைப் போலவே அவருடைய அண்ணனை சீரியலுக்குள் இறக்கி மீண்டும் சீரியல் விறுவிறுப்பு ஏற்படுத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் யார் இந்த கேரக்டரில் இனி வரப் போகிறார்கள் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் குணசேகரனை தேடி கண்டுபிடித்து வருகிறோம் என்று கதிர் மற்றும் ஞானம் இருவரும் வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜான்சி ராணி அப்பத்தா சொன்ன மாதிரி நீங்க அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி போய்கிட்டே இருக்கணும்னா,அது என்ன அடுத்த அடுத்த கட்டம் கேட்டு சொல்லுங்க என்று சொல்கிறார்.

அதற்கு நந்தினி ஏய் உனக்கு அவ்வளவு தான் மரியாதை என்று சொல்ல, அதற்கு விசாலாட்சி "ஏய் இந்தாருடி இதோட எல்லாத்தையும் நிப்பாட்டிருங்க போதும்" என்று சொல்ல, கரிகாலனும் ஜான்சி ராணியும் சந்தோஷப்படுகின்றனர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் ஒரு கார் வருகிறது. அதை பார்த்து ஐயோ அத்தை அடுத்த இடி வந்துருச்சு என்று கரிகாலன் கத்த காரை பார்த்ததும் ரேணுகாவும், நந்தினியும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் அந்த காரில் யார் வரப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஏற்கனவே ஜீவானந்தத்திடம் நேற்று ஈஸ்வரி குணசேகரனை கண்டு பிடிக்கும் படி உதவி கேட்டு இருந்தபோது வெண்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஈஸ்வரி சொல்லியிருந்தார். அதனால் வெண்பாவை வீட்டில் கொண்டு விடுவதற்காக ஜீவானந்தம் காரில் வருகிறாரா? அல்லது குணசேகரன் தான் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தார் என்ற உண்மையை கௌதம் தெரிந்து விட்டதால் கௌதம் வீட்டிற்கு வருகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications