கதிர், ஞானத்திடம் குணசேகரன் பற்றி ரகசியத்தை சொல்லும் சாமியார்.. அப்பத்தாவால் உடைபடும் உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனை தேடிப்போன கதிர் மற்றும் ஞானத்திற்கு சாமியார் ஒருவரால் அதிர்ச்சி கிடைக்கிறது.

அதே நேரத்தில் வெண்பா பற்றிய ரகசியம் அப்பத்தாவால் வீட்டில் உடைபட இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஈஸ்வரி மற்றும் தர்ஷனால் கோபப்பட்டு வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே போயிருந்தார். அத்தோடு தன்னுடைய சொத்துக்களையும் தன்னுடைய தம்பி அம்மா பெயருக்கு மாற்றி எழுதி வைத்திருக்கிறார். இதனால் குணசேகரன் மீண்டும் வருவாரா இல்லையா என்று குடும்பத்திற்கு சந்தேகம் வந்திருக்கிறது.

இந்த நிலையில் குணசேகரனை தேடி கதிர் மற்றும் ஞானம் கிளம்பி போகின்றனர். அந்த நேரத்தில் ஜீவானந்தத்திடம் குணசேகரனை கண்டுபிடித்து தரச் சொல்லி ஈஸ்வரி கேட்டுக் கொண்டதால் ஜீவானந்தம் குணசேகரனை தேடி போகப் போகிறார். அந்த நேரத்தில் வெண்பாவை ஈஸ்வரி வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் வெண்பா யார் என்பது பற்றி கரிகாலனுக்கு சந்தேகம் வருகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கிச்சனுக்குள் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டு கேட்பதற்காக கரிகாலன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா கிச்சனுக்குள் இருந்து ஈஸ்வரி யாருமா இந்த குழந்தை என்று கேள்வி கேட்கிறார். அதற்கு நந்தினி, இது ஈஸ்வரி அக்கா பிரண்டோட பொண்ணு. அந்த பிரண்டு நம்ம எல்லாருக்கும் ம்யூச்சுவல் ஃபிரண்ட் என்று நந்தினி சொல்ல, அதற்கு அப்பத்தா அப்படியா என்று கேட்க, அப்படித்தான் என்று நந்தினியும் சிரிச்சபடியே சொல்கிறார்.

இதைக் கேட்டு கரிகாலன் யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ஞானம் தெருவில் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஒரு சாமியார் தம்பிகளா வாங்க என்று கூப்பிடுகின்றார். அதற்கு ஞானம் வா கதிர் காரில் போலாம் என்று கூப்பிட, அப்போது அந்த சாமியார் கதிர் நில்லு என்று சொல்ல, அதற்கு ஞானம் யாருப்பா நீ என்று கேட்க குணசேகரனை பார்க்கணுமா? வேண்டாமா? என்று சாமியார் கேட்க, அதைக் கேட்டு கதிர் மற்றும் ஞானம் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் குணசேகரன் பற்றி ஏதாவது ரகசியங்கள் வெளியே தெரிய வரும் என்று ஆர்வம் அனைவருக்கும் ஏற்படுகிறது. அதே நேரத்தில் வெண்பா ஜீவானந்தம் குழந்தை தான் என்பது தெரிந்தால் வீட்டில் என்ன மாதிரி பூகம்பம் வெடிக்கும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications