எதிர்நீச்சலில் செருப்பை வைத்து நடந்த அதகளம்.. ஒரு டயலாக்கில் உடைந்த உண்மை.. இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடில் குணசேகரன் மீண்டும் வருவது போன்ற காட்சிகள் அமைந்திருந்தது.

குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு அவருடைய கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்த நிலையில் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருந்தது.

Ethirneechal Serial 2023 September 25th episode full update

அதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்விக்கான விடையும் கிடைத்திருந்தது. அதை யாரும் கவனித்தீர்களா? அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யாரும் யோசிக்க முடியாத வகையில் தான் கதை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து திடீரென சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.

அதற்குப் பிறகு மாரிமுத்துவின் கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. அதே நேரத்தில் இனி மாரிமுத்துவின் கேரக்டரில் யாரும் நடித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பலர் கூறி வந்தனர். இதனால் மாரிமுத்துவின் கேரக்டர் இனி அதிகமாக சீரியலில் காட்டப்படாமல் போய்விடுமோ என்றும் கேள்விகள் எழுந்து வந்தது. அது குறித்து இந்த சீரியலின் இயக்குனரும் விளக்கமும் கொடுத்து இருந்தார்.

Ethirneechal Serial 2023 September 25th episode full update

ஆனால் நேற்று முன் தினம் வீட்டை விட்டு வெளியே வந்த குணசேகரனை தேடி கதிர் மற்றும் ஞானம் இருவரும் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தனர். அப்போது சாமியார் ஒருவர் குணசேகரன் இந்த ஊரில் தான் இருக்கிறார். அவரை சமாதானம் செய்து கூட்டி வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். பிறகு காரில் குணசேகரன் வந்து இறங்குவது போன்று எபிசோடை முடித்து இருந்தனர்.

குணசேகரனுடைய கால்கள் மட்டுமே தெரியும் வகையில் நேற்று முன்தின எபிசோடு முடிவடைந்த நிலையில் நேற்று எபிசோடுக்காக அதிக அளவில் ஆர்வத்தோடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நேற்று யார் அந்த குணசேகரன் என்பதை கடைசி வரைக்கும் முகத்தை காட்டாமலேயே காட்சிகளை வைத்திருந்தனர். குணசேகரன் பார்க்கும் போது கதிர் மற்றும் ஞானம் இருவரும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். (ஆனால் அவர்கள் தூங்கினார்கள் என்பதை நம்ப முடியவில்லை) அப்போது குணசேகரன் தம்பிகளை எழுப்ப வேண்டாம் நான் சொன்னதை மட்டும் நீங்க சொல்லிருங்க என்று சொல்லிவிட்டு நான் வந்துட்டு போனதுக்கு அடையாளமாக அவர்களிடம் என்னுடைய செருப்பைக் காட்டுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து குணசேகரன் சென்ற சிறிது நேரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த கதிர் மற்றும் ஞானம் இருவரும் முழித்து அந்த சாமியாரிடம் அண்ணன் எங்கே என்று கேட்டு பிரச்சனை செய்ய அப்போது சாமியார் செருப்பைக்காட்டி உங்க அண்ணன் வந்துட்டு போனதுக்கான அடையாளம் ஆதாரம் என்று சொல்லி அண்ணன் உங்க கிட்ட சொல்ல சொன்னாரு. நீங்க உங்க ஊரு கோவில் திருவிழாவை பிரம்மாண்டமா எடுத்து நடத்தனுமாம். அப்போது அப்பத்தாவையும், ஜீவானந்தத்தையும் கண்டிப்பா அழைக்கணுமாம். அவங்க ரெண்டு பேரையும் அந்த நிகழ்ச்சியில் போட்டு தள்ளனுமாம். அப்போதான் குணசேகரன் கம்பீரமா அங்க வந்து இறங்குவாரு என்று சொல்லியிருந்தார்.

அதே நேரத்தில் அதைத்தொடர்ந்து ஞானமும் கதிரும் வீட்டிற்கு வந்து விசாலாட்சி இடம் அங்க நடந்ததை பற்றி சொல்கின்றனர். அண்ணன் வந்து எங்களை பார்க்க வந்தாரு, அந்த நேரத்தில் நாங்க அசந்து தூங்கிட்டோம் என்று சொல்லி அண்ணன் போட்டிருந்த செருப்பு என்று சொல்ல அந்த (புது) செருப்பை விசாலாட்சி தன்னுடைய நெஞ்சோடு அணைத்து அழுது கொண்டிருந்தார். பிறகு குணசேகரன் அமரும் சேர் பக்கத்திலேயே ஞானம் டைனிங் டேபிளில் அந்த செருப்பை வைத்திருந்தார். இதுதான் அதிகமான ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ethirneechal Serial 2023 September 25th episode full update

ஏற்கனவே குணசேகரனை தேடி ஜீவானந்தம் ஒரு பக்கமாக காரில் போய்க்கொண்டிருக்கிறார். அதுபோல ஜீவானந்தம் மனைவியை கொலை செய்ததற்காக குணசேகரனை கொலை செய்ய வேண்டும் என்று கௌதம் ஒரு பக்கமாக கிளம்பி போயிருக்கிறார். இந்த நிலையில் இனி குணசேகரன் சொன்ன மாதிரி கதிர் கோவில் திருவிழாவை எடுத்து நடத்தும் போது அங்கு வைத்து பட்டம்மாள் மற்றும் ஜீவானந்தத்தை கொலை செய்ய முயற்சி செய்யும்போது அதில் குணசேகரன் இறந்து போவது போன்று சாட்சிகள் வைக்கப் போகிறார்கள் என்பது நேற்றைய டயலாக்கில் தெரிகிறது.

ஏற்கனவே ஜோதிடர் வீட்டின் மூத்த உசுருக்கு ஆபத்து என்று சொல்லி இருக்கிறார். இத்தனை நாட்களாக வீட்டில் மூத்த நபராக குடும்பத்தை எடுத்து நடத்தி வந்தது குணசேகரன் தான் அதனால் அவர்தான் இறந்து போக போகிறாரா? அல்லது வயதில் மூத்தவராக இருக்கும் அப்பத்தா இறந்து போக போகிறாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் கதையில் எப்படியும் அப்பத்தா இறந்து போவது போன்று காட்சிகள் வைக்க மாட்டார்கள். அப்பத்தாவிடம் இனி ஆதி குணசேகரனின் அண்ணன் வந்து சண்டை போடுவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+