தாலியை கழட்ட போன நந்தினி.. வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்திய பெண்.. விசாலாட்சி செய்த எதிர்பாரா செயல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கதிர் பிரச்சனை செய்வதால் நந்தினியால் சமையல் ஆர்டர் கொடுக்க முடியாமல் அவமானப்படுகிறார்.

அதனால் கோபத்தில் தாலியை கழட்டி கொடுக்கப் போக அதை பார்த்து விசாலாட்சி கோபத்தில் கன்னத்தில் அடிக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க முடியாத வகையில் கதை பயணித்து கொண்டு இருக்கிறது. நேற்றைய எபிசோடில் குணசேகரன் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் அவர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்தது.

நேற்றைய எபிசோடில் செருப்பை வைத்து ராமாயண கதையை எதிர்நீச்சல் சீரியலுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். ராமாயணத்தில் எப்படி ராமனுடைய செருப்பை வைத்து அவருடைய தம்பி ஆட்சி செய்தாரோ அதுபோலத்தான் எதிர்நீச்சல் குடும்பத்திற்குள்ளும் குணசேகரன் உடைய செருப்பு நேற்று டைனிங் ஹாலில் வீற்றிருந்தது. அது பலருடைய கேள்விகளை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் குணசேகரனை கூட்டிட்டு வரப்போகிறோம் என்று போன கதிரும் ஞானமும் குணசேகரனின் செருப்பைக் கொண்டு வந்து வீட்டில் டைனிங் ஹாலில் வைத்துக் கொண்டு கிச்சனில் நந்தினி சமையல் செய்து ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லும்போது கதிர் அது குறித்து கேள்வி கேட்க அப்போது விசாலாட்சி அதுபற்றி நான் சொல்கிறேன் என்று நேற்றைய எபிசோடில் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி சாப்பாடு அனுப்பாததால் கேட்டரிங் ஆர்டர் கொடுத்த பெண் வீட்டிற்கே வந்து பிரச்சினை செய்கிறார். நீங்கள் கைநீட்டி காசு வாங்கி இருக்கீங்க. அப்ப யாரு பதில் சொல்லுவது என்று கேள்வி கேட்க, அதற்கு பணம் தானே வேணும் மேடம், இந்தாங்க இதை எடுத்துட்டு போங்க என்று கழுத்தில் கிடந்த தாலியை நந்தினி கலட்ட அதற்கு விசாலாட்சி நிறுத்துடி என்று கத்துகிறார்.
அதோடு குத்து கல்லாட்டம் உன் புருஷன் எதிரில் நிற்கிறார். நீ தாலிய கலட்ற என்று கேட்க, அதற்கு குணசேகரனை போலவே நந்தினியும் அவங்க மரியாதை கொடுத்தா நாங்களும் கொடுப்போம். என்னை பொறுத்த வரைக்கும் இது தாலி இல்ல. வெறும் செயின் தான் என்று கத்தி பேசுகிறார். அதற்கு விசாலாட்சி அதுக்காண்டி அறுத்து போட்டுடூவியா என்று கேட்க, அதற்கு நந்தினி ஆமாம் அறுத்து போட்டு விடுவேன் என்று சொல்ல விசாலாட்சி கோபத்தில் நந்தினியின் கன்னத்தில் அடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து கதிர் வெண்பாவை பார்த்து ஆமா இது யாரு என்று ஈஸ்வரி இடம் கேட்க, அதற்கு ஈஸ்வரி உனக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்ல, கதிர் கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு பயந்துபோன வெண்பா ஈஸ்வரியை கட்டி அணைத்தபடி நிற்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று பெரிய அளவில் பஞ்சாயத்து இருக்கிறது என்பது தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications