எதிர்நீச்சல்: அப்பத்தாவை போட்டு தள்ள பிளான் போடும் குணசேகரன்.. ஆடிட்டரின் பதில்..அதிர்ச்சியில் கதிர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 5ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்பத்தாவிடம் கோபப்பட்டு கொண்டு அங்கே எதுவும் பேசாமல் குணசேகரன் வீட்டை விட்டு கிளம்புகிறார்.
அதைத்தொடர்ந்து அப்பத்தாவை கொலை செய்வதற்காக குணசேகரன் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லியே அப்பத்தா தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியிருந்தார். குணசேகரன் ஈஸ்வரியை விவாகரத்து செய்வதற்காக பிளான் போட்டுக் கொண்டிருந்த நிலையில் அப்பத்தா குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தன்னுடைய கண்டிஷன் பற்றி சொல்லி இருந்தார்.
அதுபோல இத்தனை நாட்களாக கத்தி கத்தி பேசியே வீட்டு சுவர் எல்லாம் உதிர்ந்து போய் இருக்கும். இனி கத்துற நாட்கள் அடங்கி விட்டது. இனி கேட்க வேண்டிய நாள் வந்துவிட்டது. அதனால் குணசேகரன் இனி பேசுவதை விட்டுவிட்டு நாம பேசுவதை கேட்க வேண்டும் என்று நேற்று அப்பத்தா பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் மாடியிலிருந்து கிளம்ப அதற்கு ஞானம் தடுக்கிறார்.
அதற்கு வேணாம்பா வா நம்ம கெளம்புவோம். அதான் தெளிவா சொல்லிட்டாங்களே, பேசுற காலம் போய் கேட்கிற காலம் வந்துட்டேன்னு... யாருக்கு என்ன காலம் வந்திருக்குன்னு பொறுமையா பாக்கலாம் என்று குணசேகரன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப, அதற்கு ரேணுகாவும் நந்தினியும் நக்கலாக சிரிக்கின்றனர். அதுபோல குணசேகரனை பார்த்து அப்பத்தாவும் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து குணசேகரன் கதிருடன் சேர்ந்து ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞரை வரச் சொல்லி சந்திக்க, அப்போது வழக்கறிஞர் அடுத்த அடி அவங்க என்ன மாதிரி வைக்க போறாங்கன்னு தெரியாம அதுக்கு நாம ரியாக் பண்றது ரொம்ப கஷ்டம் சார் என்று சொல்ல, அதற்கு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க அந்த கிழவியை போட்டுறலாமா என்று கேட்க அதற்கு கதிர் அதிர்ச்சியாகிறார். அதைத் தொடர்ந்து ஆடிட்டரும் வக்கீலும் ரகசியமாக தலையசைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் அப்பத்தா மீண்டும் கம்பேக் கொடுத்து வெறித்தனமாக தன்னுடைய பஞ்ச் டயலாக் மூலமாக குணசேகரனிடம் மல்லுக்கு நிற்பது வேற லெவலில் இருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியாக இருக்கும் சக்தி மற்றும் ஜனனிக்கு அதிகமான டயலாக் மற்றும் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லையே என்று பலர் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதுபோல குணசேகரன் அப்பத்தாவை மரியாதை இல்லாமல் பேசுவதும் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதாக தற்போது வெளியான ப்ரோமோவிற்கு கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் சீக்கிரமாகவே ஜீவானந்தத்திற்கு கதிர் பற்றி தெரிய வேண்டும். தன்னுடைய மனைவியை கொன்றது கதிர் தான் என்று தெரிந்த பிறகு ஜீவானந்தம் கதிரை பொளந்து கட்ட வேண்டும் என்று என்பதும் பலருடைய ஆசையாக இருக்கிறது. அது எப்போது வரப் போகிறது என்பது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications