எதிர்நீச்சல்: சிங்கம் புறப்பட்டது! அதிரடியாக மாற்றப்பட்ட கதை.. இதை கவனிச்சீங்களா? செம டூவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 22 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் கதையும் அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இந்த சீரியல் தொடங்கிய முதல் நாளிலிருந்து இது பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்திய சீரியல் என்று சொல்லப்பட்ட கதை. ஆனால் நாட்கள் போகப்போக ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் தோற்றுப் போனது போல தான் கதை போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அதிகமான பாசிட்டிவ் கருத்துக்களை பெற்று வந்த இந்த சீரியல் சமீபத்தில் சில மாதங்களாக நெகட்டிவ் கருத்துக்களை இணையத்தில் பெற்று வருவதை பார்க்க முடிகிறது.

ஆனாலும் சீரியலின் தீவிர ரசிகர்கள் இந்த சீரியலுக்கு இன்னும் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை இயக்குனர் புரிந்து கொண்டு விட்டார் போல... அதனால் கதையில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறார். இதுவரைக்கும் ஜனனி சவால் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது ஈஸ்வரி சவாலை தொடங்கி இருக்கிறார்.

ஏற்கனவே ஈஸ்வரி தர்ஷினி காணாமல் போயிருக்கும் போது தர்ஷினியை காப்பாற்றிக் கொண்டு வருவேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் அதில் சொதப்பிவிட்டார் இப்போது தன்னுடைய மகளுக்கு ஜனனியின் அத்தை பையனை திருமணம் செய்து வைக்க விடமாட்டேன் என்று ஈஸ்வரி சவால் விட்டு இருக்கிறார். அதில் ஜெயிக்கப் போகிறாரா? அல்லது இதிலும் வழக்கம் போல தோற்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் ஜனனியின் அத்தை பையன் காதலிப்பது ஜனனியின் தங்கையை தான் என்ற உண்மையை இன்றைய ப்ரோமோவில் ஜனனி குணசேகரனிடம் சொல்லி இருக்கிறார். வழக்கமாக இந்த மாதிரி உண்மைகள் எதிர்நீச்சல் சீரியலில் தெரிவதற்கு சில பல மாதங்கள் ஆகிவிடும். ஆனால் இப்போது உடனடியாக உண்மைகளை தெரிய வைத்து அடுத்த அடியை வேகமாக எடுத்து வைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இனி சீரியலின் கதை வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்ஷினி காணாமல் போய் பல மாதங்களாக தேடியது போல இனி மாத கணக்கில் ஒரு கதை சுற்றிக் கொண்டிருக்காமல் அடுத்தடுத்த திருப்பங்கள் இதுபோல நடந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தானோ என்னவோ கரிகாலனையும் ஜான்சி ராணியையும் வீட்டை விட்டு அடித்து துரத்தியது போல கதையை கொண்டு போய் இருக்கிறார்கள்.
அதனால் இனி ஜனனி குடும்பத்திற்கும் குணசேகரன் குடும்பத்திற்கும் நடக்கும் பிரச்சனைகள் பற்றியே கதை நகரும். ஏற்கனவே ஜனனியின் அப்பா தன்னுடைய அம்மா குடும்பத்தோடு சேர்ந்து இருக்கும் நிலையில் இனி தன்னுடைய மகள் வாழ்க்கை முக்கியம் என்று பார்க்கப் போகிறாரா? இல்லை இப்போதும் தனக்கு வசதி வாய்ப்பு வேண்டும் என்று அம்மா வீட்டில் அடிமையாக இருக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனால் ஜனனியின் தங்கை காதலிப்பது ஜனனியின் அத்தைப் பையனாகத்தான் இருக்கும் என்பதை சில மாதங்களுக்கு முன்பே ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான்... எப்படியோ ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சீரியல் கொஞ்சம் வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இதுபோலவே இனி அடுத்தடுத்த திருப்பங்கள் விரைவாக வந்து பெண்கள் முன்னேறினால் மீண்டும் பழைய மாதிரி ரசிகர்களின் மனதை கவரும்.. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications