குணசேகரன் பக்கம் சாயும் தர்ஷன்! சத்தியத்தால் ஏமாறும் ஜனனி குரூப்.. பஞ்சாயத்து தெருவுக்கே வந்தாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 25ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் தன்னுடைய பெண் தோழிகளோடு தர்ஷன் போலீசில் சிக்க அங்கு வரும் குணசேகரன் தர்ஷனை காப்பாற்றுகிறார்.

அதே நேரத்தில் ஜனனியின் தங்கச்சி சஞ்சனாவுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று சக்தி எடுத்திருக்கும் முடிவு நடக்குமா? இல்லையா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial 25th march 2024 promo and episode full update

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கும் நிலையில் இப்போது புதியதாக பிரச்சனைகள் மட்டும் இந்த சீரியலில் முளைத்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பிரச்சனைகள் கூட உருப்படியாக முடிவுக்கு வராமல் அடுத்தடுத்த பிரச்சனைகளில் இந்த சீரியல் சிக்கி கொண்டிருக்கிறது.

எந்த பக்கம் போனாலும் ஒரு கதைக்கும் முடிவு வரவில்லை என்பது ரசிகர்களுக்கு வேதனையாக இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்து இங்கு தொடங்கப்படும் பிரச்சனைகளுக்கு முடிவு இல்லாமலே அடுத்த புது பிரச்சனை வருவது தான் இந்த சீரியலின் டிஆர்பியின் முக்கிய காரணமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலின் பெண்கள் எப்போது தான் எதிர்நீச்சல் போடுவார்கள் என்று சமீபத்தில் வெளியாகும் ப்ரோமோக்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் இந்த சீரியலுக்கு அதிகமான பாசிட்டிவ் கமாண்டுகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. இந்த நிலையில் சீரியல் இயக்குனர் கதையை சீக்கிரமாக மாற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் பேட்டி ஒன்றில் நான் ஒரு சீரியலை தொடங்குவதற்கு முன்பே அதை எப்படி முடிக்க போகிறோம் என்பதை முடிவு செய்து விடுவேன்.

Ethirneechal Serial 25th march 2024 promo and episode full update

சீரியலின் நடிகர்களிடம் கதை சொல்லும் போது கூட சீரியல் கதை எப்படி எல்லாம் பயணிக்கும் என்பது எல்லாவற்றையும் சொல்லி விடுவேன். மற்ற சீரியல்கள் போல தொடங்குவது மட்டும் தொடங்கிவிட்டு பிறகு ஒவ்வொரு வார டிஆர்பிக்கு தகுந்த மாதிரி கதையை மாற்றுவது கிடையாது என்று கூறியிருக்கிறார். இதனால் எந்த மாதிரி இந்த சீரியல் இனி போகப்போகிறது என்று யாருக்கும் தெரியாத கதை தான்.

அதே நேரத்தில் இப்போது வெளியான ப்ரோமோவில் சக்தி ஜனனியின் அத்தை மகனிடம் நீ சஞ்சனாவை உண்மையில் காதலிக்கிறாய், கைவிடமாட்டாய் என்றால் அவளுக்கு சத்தியம் பண்ணி கொடு என்று சொல்ல நடுரோட்டில் வைத்து அவரும் சத்தியம் பண்ணி கொடுக்கிறார். அந்த நேரத்தில் ஜனனியின் அத்தை உமையாள் அங்கு வந்துவிட நீ எதற்கு என் மகன் கிட்ட பேசிட்டு இருக்க என்று ஜனனியை பார்த்து உமையாள் கேள்வி கேட்க, அதற்கு ஜனனி என் தங்கச்சியை கல்யாணம் பண்ண போறவரிடம் தான் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக போலீஸ் ஆபீஸர் ஒருவர் குணசேகரனுக்கு போன் போட்டு நாங்க ஒரு பையனை விசாரிச்சுட்டு இருக்கோம். அவர் உங்க பையன்னு சொல்லுறாரு என்று சொல்ல, அதற்கு குணசேகரன் அப்படியா தர்ஷன் என்னுடைய பையன் தான். நான் உடனே அங்கே வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு இடத்திற்கு வருகிறார். அது ரோட்டு பகுதியாக இருக்கிறது. ஒரு சில பெண்களோடு தர்ஷன் தனியாக நிற்கிறார். அதே இடத்தில் சக்தி மற்றும் ஜனனியும் இருக்கின்றனர்.

இதனால் தன்னை போலீஸிடம் இருந்து காப்பாற்றிய குணசேகரன் பக்கம் இனி தர்ஷன் சாய்ந்து விடுவாரா? என்ற கேள்விகள் எழுகிறது. அதுபோல இவர்கள் இத்தனை நாட்களும் வீட்டுக்குள்ளே தான் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது இவர்கள் பிரச்சனை ரோடு வரைக்கும் வந்துவிட்டது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+