தர்ஷினியின் கழுத்தில் கத்தி.. காப்பாற்ற வரும் ஜீவானந்தம்! இதற்கு தான் இத்தனை நாள் ஓட்டமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 6ஆம் தேதிக்கான எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த அடி ஆட்கள் போலீஸிடம் சரண் அடைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தாங்கள் தர்ஷினியை கடத்தியது ஜீவானந்தம் சொல்லித்தான் என்று ஜீவானந்தத்தை மாட்ட வைத்திருக்கின்றனர்.
இத்தனை நாட்களாக குணசேகர் தான் ஒவ்வொரு இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருந்தார். அதுபோல இப்போதும் குணசேகரன் ஜெயித்து ஜீவானந்தத்தை மாட்ட வைத்திருக்கிறார். ஆனால் தர்ஷினி தப்பித்து ஆற்றுக் கரையோரம் விழுந்து கிடக்கும் நிலையில் அவரை கொலை செய்ய ஒரு ரவுடி அருவாயை தூக்கிக் கொண்டு போகிறார். இப்படியாக ப்ரோமோவில் இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவை பார்த்து ரசிகர்களுக்கு என்ன இப்படி பண்ணுறீங்களே என்று தான் சொல்ல தோன்றி இருக்கும்... காரணம் இந்த சீரியலில் கதாநாயகன் யார் என்ற கேள்வி எல்லோருக்கும் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறது. இந்த சீரியலில் மட்டும் தான் வில்லன் ஒவ்வொரு இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் கதாநாயகன் யார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.
இந்த சீரியலில் மட்டும் தான் வில்லன் ஒவ்வொரு இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியல் மற்ற சீரியல்களை விட வித்தியாசமாக இருப்பதால் மத்தியில் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்தது. ஆனால் இப்போது இந்த சீரியல் மற்ற சீரியல்களைப் போலவே மாதக்கணக்கில் ஒரே கதையை இழுத்துக் கொண்டு போகிறார்கள். இது ரசிகர்களுக்கு கடுப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் தர்ஷினி காணாமல் போய் ஒரு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் காப்பாற்றப்படாமல் இருக்கிறார். ஆரம்பத்தில் தர்ஷினியை கடத்தியது யார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ரசிகர்கள் இது குணசேகரன் வேலைதான் என்று கண்டுபிடித்து விட்டார்கள். அதுபோலவே இப்போது கதையும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் இதுவரைக்கும் குணசேகரன் எல்லா இடங்களிலும் ஜெயித்துக் கொண்டிருப்பது போல தர்ஷினி விஷயத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அதாவது ஒரு ரவுடி குரூப்பிடம் இருந்து தப்பித்து இன்னொரு ரவுடி குறிப்பிடம் மாட்டி இருக்கிறார். ஆனால் குணசேகரன் தர்ஷினிக்கு கரிகாலனோடு திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் ரகசியமும் தர்ஷினிக்கு தெரிய வந்துவிட்டது. ஆனால் போதை மருந்து கொடுத்ததால் மயக்கத்தில் இருக்கும் தர்ஷினி ரவுடிகளிடமிருந்து தப்பித்து மலையில் ஒரு ஆற்று பக்கத்தில் விழுந்து கிடக்கிறார்.
அதே நேரத்தில் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த ரவுடிகளை போலீஸ் ரவுண்டு கட்டி விட்டனர். இதனால் குணசேகரனுக்கு போன் போட்டு ரவுடிகள் எங்களை இப்ப சுட்டு தள்ள போறாங்க என்று சொல்ல குணசேகரன் அவர்களுக்கு சில அறிவுரைகளை கொடுக்கிறார். அடுத்த கட்டத்தில் ஜனனி போலீஸ் ஸ்டேஷனில் இந்த தர்ஷினி கடத்தலில் ஜீவானந்தத்திற்கு எந்த பங்கும் இல்லை என்று சொல்ல அப்போது கொற்றவை ஐபிஎஸ் கையில் ஒரு பேப்பரை கொடுக்கிறார்.
அதில் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த ரவுடிகள் நாங்கள் ஜீவானந்தம் சொல்லி தான் தர்ஷினியை கடத்தினோம் என்று வாக்குமூலம் கொடுத்து சரண்டர் ஆகி இருக்கின்றனர். அதே நேரத்தில் தர்ஷினியை கண்டுபிடித்த ஒரு ரவுடி நீ இருந்தா தானே எங்களை போட்டுக் கொடுப்பா...! உன்ன இப்ப கொலை பண்ண போறேன் என்று அருவாளை தூக்கிக்கொண்டு போகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கும் நிலையில் குணசேகரன் சொன்னது ஒவ்வொரு இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இனி ஜீவானந்தம் தர்ஷினியை கடைசி நேரத்தில் அந்த ரவுடி இடம் இருந்து காப்பாற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குணசேகரனின் பிளான் தர்ஷினிக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் தர்ஷினி குணசேகரனுக்கு எதிராக போலீசில் வாக்குமூலம் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் கரிகாலனும் அவருடைய அம்மாவும் மீண்டும் வீட்டிற்கு வந்து இருப்பதால் தர்ஷினியை குணசேகரனை கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து கரிகாலனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறாரா என்ற கேள்விகளும் எழுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications