எதிர்நீச்சலில் மீண்டும் சொதப்பல்.. இயக்குனர் ஏன் இப்படி செய்தார்? இதை தவிர்த்து இருக்கலாமே!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் நடந்த சொதப்பல்கள் குறித்து தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம். இதுவரைக்கும் இந்த எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் எப்போதுமே சவால் விட்டு கொண்டிருக்கிறார்களே தவிர ஒருமுறை கூட தாங்கள் விட்ட சவாலில் ஜெயித்ததில்லை. ஆனால் இப்போது தர்ஷினி காணாமல் போயிருக்கும் போது பெண்கள் தர்ஷினியை ஆண் துணை இல்லாமல் கண்டுபிடித்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் கடைசியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது. எப்போதும் போல குணசேகரன் தான் இந்த முறையும் வெற்றி பெற்று இருக்கிறார். அதிலும் நேற்று நடந்த நிகழ்வுகள் சில ரசிகர்களின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் சில சொதப்பல்களும் நடந்தது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் இப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது சக்தியை தொடர்ந்து கதிர், ஞானமும் பெண்களை பற்றி புரிந்து கொண்டு வீட்டு மருமகளுக்கு உதவியாக மாறி இருக்கின்றனர். ஆனால் வீட்டு பெண்கள் மட்டும் எப்போதுமே முட்டாளாகவே காட்டப்படுவது தான் எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்புதான் குணசேகரன் இடம் ஜனனி மட்டுமல்லாமல் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி எல்லோரும் சபதம் போட்டு கடைசியில் தோற்றுப் போயிருந்தனர் . ஆனால் இந்த முறை கதையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் பெண்கள் தோற்கமாட்டார்கள் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு எப்போதும் போல இப்போதும் ஏமாற்றம் மிஞ்சி இருக்கிறது.
அதுவும் நேற்றைய எபிசோடில் நடந்ததுதான் அபத்தத்தின் உச்சம் என்று சொல்லலாம். இதுவரைக்கும் லா பாய்ண்ட பேசுகிறேன் என்று வம்பு பேசிக் கொண்டிருக்கும் ஜனனி நேற்று குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் முன்பும் ஈஸ்வரியை ஜீவானந்தத்தோடு தொடர்பு படுத்தி பேசுகிறார். அப்போது பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் ஜனனி சைலன்டாக மாறி இருக்கிறார்.

அதோடு சட்டம் பேசும் ஜனனி நேற்று தங்களுடைய மகள் காணவில்லை என்று தாங்கள் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கோம் ஆனால் எப்படி எங்களை அரெஸ்ட் செய்யலாம் என்று கேட்கவில்லை. அதுபோல எங்களின் சார்பாக நாங்கள் வழக்கறிஞராக கூப்பிடுகிறோம் என்று கூட சொல்லவில்லை. தங்களுடைய போனை போலீஸ் கேட்டதும் கொடுத்து விட்டு அங்கு வாயை மூடி அமர்ந்திருக்கிறார்கள்.
அதுபோல எதிர்நீச்சல் சீரியலில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டியது. அதாவது இந்த சீரியலில் எப்போதுமே போலீஸ் பெரிய அளவில் அறிவாளி இல்லை என்பது போலவே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது ஏனென்று தெரியவில்லை... ஆரம்பத்தில் போலீஸ் ஆபீஸரை குணசேகரன் அடித்து இருந்தார் அப்போதும் போலீஸ் குணசேகரனுக்கு எதிராக பெரிய அளவில் செய்யவில்லை.
அதுபோல ஜீவானந்தத்தை பற்றி ஆரம்பத்தில் ஜனனி போலீசில் விசாரிக்கும் போது அவர் பல பணக்காரர்களை ஏமாற்றி இடத்தை எழுதி வாங்குகிற நபர் அவரை எல்லாம் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லியிருந்தனர். நேற்று கூட குணசேகரன் சொல்படி தான் போலீஸார்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்பத்தா காணாமல் போன விஷயத்தை ஜனனி குணசேகரன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார் அதை கூட நேற்று ஞாபகப்படுத்தவில்லை.
அதையெல்லாம் விட கொடுமை நேற்று தன்னை பற்றி குணசேகரன் அவ்வளவு தரகுறைவாக பேசும் போதும் ஈஸ்வரி வழக்கமாக பேசுவது போல நிறுத்துங்க இப்படி எல்லாம் பேசாதீங்க என்று ஒரே டயலாக்கை சொல்லி இருக்கிறார். அப்போது கூட என்னை பொண்ணு கேட்டு இவர் வந்தது உண்மைதான் அதற்காக நான் தப்பு செஞ்சு விடுவேனா? நீங்களும் தான் சாருலதாவை பொண்ணு கேட்டு போனீங்க அதற்காக அவங்க தப்பா அல்லது நீங்க தப்பா என்று கேள்விகளை கேட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஒவ்வொரு முறையும் குணசேகரனிடம் சபதம் போட்டு விட்டு கடைசியில் தோர்ப்பது போல இப்போதும் இன்று வெளியான ப்ரோமோவில் கூட வீட்டு பெண்கள் தோற்றுப் போய் இருப்பது இந்த சீரியல் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது. அதுவும் மூன்று வாரங்களாக தர்ஷினி காணாமல் போய்விடும் நிலையில் தர்ஷினி என்ன ஆனார் என்ற கதையை விட்டுவிட்டு இப்போது எதிர்நீச்சல் பெண்கள் ஜெயிலுக்கு போகும் கதையை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு முறை ஏமாற்றம் வந்தால் சரி என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எப்போதுமே இது தான் நடக்கிறது என்றால் என்ன சொல்வது? என்று தெரியவில்லை. அதிலும் சிறப்பு இந்த சீரியலில் ஒவ்வொரு முறையும் குணசேகரன் ஜெயித்துக் கொண்டிருப்பதால் வில்லன் தான் இங்கே ஹீரோவாக காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுபோல இன்னொரு சந்தேகமும் வருகிறது எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் எப்படி அடிமைத்தனத்திலிருந்து மீண்டு மீண்டும் வருகிறார்கள் என்பது பற்றியது என்று சொன்னார்கள்.
ஆனால் பெண்களின் முன்னேற்றத்தை காட்டாமல் இயக்குனர் ஆண் ஜெயித்துக் கொண்டிருப்பது போல தான் காட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த சீரியலில் இயக்குனர் பெண்கள் முன்னேற்றத்தை விரும்பவில்லையா? என்ற சந்தேகம் தான் மக்களுக்கு எழும்புகிறது. ஏற்கனவே வீட்டு மருமகள்கள் ஒவ்வொரு பிசினஸ் ஆக தொடங்கினார்கள். அதுவும் குணசேகரனால் முடக்கப்பட்டது.
ஜனனி கம்பெனி தொடங்கினார் அங்கேயும் சிலர் வந்து முடக்கி விட்டார்கள். இப்படி பெண்களை எழுந்து வர விடாமல் முடக்கி வைப்பதே ஆண்களின் வேலை என்று இந்த சீரியல் கூறுகிறதா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இனிவரும் காலத்தில் இந்த சீரியல் எப்படி போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் இப்போது இரண்டு வருடத்தை இந்த சீரியல் கடந்துவிட்டது. இரண்டு வருடத்தில் ஒருமுறை கூட இந்த வீட்டு பெண்கள் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனியாவது கதையை மாற்றுகிறார்களா? என பார்ப்போம்.
எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் நடந்தது சரியா தவறா என்பதை பற்றி உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லிட்டு போங்க.












Click it and Unblock the Notifications