எதிர்நீச்சல்: நிஜ வாழ்க்கையில் இந்த சீரியலால் ஞானம் கேரக்டர் மாறிவிட்டது.. உருக்கமாக பேசிய நிஜ மனைவி
எதிர் நீச்சலில் ஞானம் கேரக்டரில் நடிக்கும் கமலேஷ் நிஜ கேரக்டர் பற்றி அவருடைய மனைவி சிந்து பல தகவல்களை கூறி இருக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கேரக்டரில் நடிகர் கமலேஷ் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் ஞானம் எந்த முடிவையும் உறுதியாக எடுக்காமல் தயங்கியபடியே இருப்பார்.
நிஜ வாழ்க்கையில் அதிகமாக கோபப்படும் நபர் தான் கமலேஷ் என்று அவருடைய மனைவி கூறி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் கமலேஷ் நடிப்பை பார்த்து வெளியே செல்லும்போது தன்னை பலர் பாவமாக பேசுகிறார்கள் என்று அவருடைய மனைவி கூறி இருக்கிறார்.

எதிர்நீச்சல் ஞானம்
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகமான ரசிகர்கள் பெருகி வருகின்றனர். அந்த வகையில் ஞானம் என்ற ஞானசேகரன் கேரக்டரில் நடித்து வரும் கமலேஷ் பற்றி அவருடைய மனைவி பல தகவல்களை கூறி இருக்கிறார். இந்த சீரியலில் அண்ணன் பேச்சு தவறு என்பது புரிந்து கொண்டாலும் அதற்கு துணிச்சலாக எதிர்த்து கூறாமல் எப்போதும் யோசித்தபடியே இருக்கும் ஒரு கேரக்டராக ஞானம் இருந்து வருகிறார்.

அடுத்த நொடி மறையும் கோபம்
எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் நல்லவரா? கெட்டவரா? என்று யாராலும் யூகிக்க முடியாத வகையில் இருந்து வருகிறார். ஆனால் அவருடைய நிஜ வாழ்க்கையில் அவர் ரொம்பவே ஜாலியான கேரக்டராம். டக்கென்று கோபப்படுவாராம், ஆனால் கோபம் எல்லாம் ஒரு நிமிடம் தானாம். கோபம் வந்த அடுத்த நொடியே இவர் சாந்தமாக மாறிவிடுவார் அதுதான் என்னுடைய கணவரின் சிறப்பு என்று அவருடைய மனைவி சிந்துஜா கூறி இருக்கிறார்.

கேரக்டர் பிடிக்கவில்லை
நடிகர் கமலேஷியின் மனைவி சிந்துஜா இவர்கள் இருவரும் ஜாலியான டைப்பாக இருப்பதால் எப்போதும் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் அது காணாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இவர் சீரியலில் நடிப்பது இவருடைய கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட்டாக இருக்கிறது. கேரக்டர் என்று பார்த்துவிட்டால் எனக்கு ஞானத்தை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை இப்படி எல்லாம் ஒரு மனுசனா என்று சொல்லும் வகையில் இருக்கிறது. ஆனால் அது என்னுடைய கணவர் கமலேஷ் என்று பார்க்கும்போது அது ரசிக்கத்தான் தோன்றுகிறது என்று கூறி அவருடைய மனைவி சிந்துஜா கூறி இருக்கிறார்.

அது நடிப்புதான்
அது மட்டுமல்லாமல் கமலேஷ் ஆனந்தம் சீரியலில் நடிக்கும் போது வெளியே செல்லும் இடமெல்லாம் பலரும் இவரிடம் நீதான் பாவம் உன் கணவர் ஏற்கனவே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கிறான். இன்னொரு பொண்ணு கிட்ட லவ் பண்றேன்னு பேசிகிட்டு இருக்கான். இது தெரியாம நீயும் கல்யாணம் பண்ணி இருக்கிறா பாவம் தான் என்றெல்லாம் பலர் கூறி இருக்கிறார்கள். அப்போ அதிர்ச்சியாக இருந்தாலும் போகப் போக அது பழகிவிட்டது. இப்போவும் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கேரக்டரை பற்றி வெளியே செல்லும் இடமெல்லாம் பலரும் என்னிடம் கேள்வி கேட்கும் போது எனக்கு சிரிப்பாக இருக்கிறது. அவர் அவருடைய கேரக்டரை அப்படியே நடிக்கிறார் அவ்வளவு தான் என்று கூறி இருக்கிறார்.

அந்தப் பழக்கம் பழகிவிட்டது
அது மட்டுமில்லாமல் நடிகர் கமலேஷ் எதிர்நீச்சல் சீரியலில் எப்போதும் மீசையை முறுக்கி கொண்டே இருப்பதால் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அந்த மேனேலிசம் அப்படியே தொடர்ந்து வருகிறது என்று கூறியிருக்கிறார். இந்த சீரியலில் தொடர்ந்து ஒரு வருஷமாக நான் இதைதான் அடிக்கடி செய்து கொண்டிருக்கிறேன். அதை அப்படியே வீட்டிலும் செய்து கொண்டு இருப்பதால் இதை என்னால் நிறுத்த முடியவில்லை. அடிக்கடி மீசையை முறுக்கி முறுக்கி வெளியே செல்லும் இடமெல்லாம் என்னுடைய கை என்னை அறியாமல் மீசைக்கு சென்று விடுகிறது என்று கூறுகிறார்.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications