நடிகர் மாரிமுத்து வாழ்க்கையில் இப்படி ஒரு நம்பிக்கை துரோகமா.. அதுவும் "பிரபல” நடிகர்..யார் தெரியுமா?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிக்கும் நடிகர் மாரிமுத்து தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் பற்றி பேசி இருக்கிறார்.
அதில் பல நடிகர்களோடு நடிக்கும்போது நடிக்க கிடைத்த அனுபவங்கள் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் தன்னை முதல் முறையாக விமானத்தில் கூட்டிட்டு போய் அழகு பார்த்த ஒரு பிரபல நடிகர், இன்னொருவரை புகழ்ந்து பேசியதால் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டார் என்று மாரிமுத்து கூறியிருக்கிறார்.

தற்போதைய சூழலில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாரிமுத்து தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேட்டியில் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நடிகர் மாரிமுத்து என்று சொல்வதை விடவும் எதிர்நீச்சல் குணசேகரன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்துவிடும்.
எதிர்நீச்சல் ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலனா? அப்போ இதை கவனிச்சீங்களா..? கதையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
ஆனால் மாரிமுத்து இயக்குனராகவும், நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி விட்டு முதல் முறையாக சின்னத்திரையில் இப்போதுதான் அறிமுகமாகி இருக்கிறார். இந்த நிலையில் தன்னோடு நடித்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது நடிகர் ராஜ்கிரணோடு இவர் வேலை பார்த்த அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அது குறித்து மாரிமுத்து மனம் திறந்து பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் முக்கியமான ஒரு நபராக இருந்து வருகிறார். இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராகவும் ரசிகர்களின் மத்தியில் நிலைத்து நிற்கும் இவர் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு அவர் முதல் முதலில் தயாரித்து நடித்து வெளியான படம் தான் என் ராசாவின் மனசிலே. அந்த திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது.

அந்த காலகட்டத்தில் கிராமப்புற கேரக்டரில் இவருடைய நடிப்பு தத்ரூபமாக இருக்கும். அதே நேரத்தில் கதாநாயகர்கள் பலரும் நடிக்க பயப்படும் கேரக்டரில் கூட ராஜ்கிரண் தைரியமாக நடித்திருந்தார். ராஜ்கிரணின் திரைப்படங்கள் அதிகமாக வெற்றி அடைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது இளையராஜாவின் இசை தான்.
ராஜ்கிரணின் திரைப்படங்களில் அதிகமாக இளையராஜா பாடல்கள் இடம் பெற்றிருக்கும். அதற்கு காரணம் ராஜ்கிரணுக்கு இளையராஜாவின் மீது அதிகமான அன்பு இருந்ததுதானாம். அந்த நேரத்தில்தான் பிரபல நடிகரும் துணை இயக்குனருமாக இருந்த மாரிமுத்து ராஜ்கிரண் அலுவலகத்தில் வேலைக்கு சென்று இருக்கிறார். நடிகர் மாரிமுத்துவும் இளையராஜாவின் ரசிகர் தானாம்.
ஆனால் இளையராஜாவால் தான் ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் நிலைமை வந்துவிட்டது என்று பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு காரணம் அந்த நேரத்தில் ரோஜா படம் வெளியாகி இருந்திருக்கிறது. அதை பார்த்த மாரிமுத்து அந்த திரைப்படத்தை பற்றியும் அதில் இருந்த பாடல்கள் பற்றியும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தாராம்.

இதைப்பற்றி மாரிமுத்து உடன் இருந்த சில பேர் ராஜ்கிரணிடம் போய் சொல்லி இருக்கிறார்கள். இதை கேட்ட ராஜ்கிரண் அப்செட் ஆகிவிட்டாராம். அந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிலர் ராஜ்கிரணிடம் மாரிமுத்து பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைத்ததால் ராஜ்கிரண் மாரிமுத்துவை அலுவலகத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டாராம்.
ஆனால் இதே நடிகர் ராஜ்கிரண் தான் முதன் முதலாக மாரிமுத்துவை விமானத்தில் பறக்க வைத்து சந்தோசமும் அடைந்திருக்கிறார். ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது அனைவருக்கும் ட்ரெயினில் போவதற்காக டிக்கெட் போட்டு இருந்ததாம். அப்போது ராஜ்கிரண் மாரிமுத்துவிடம் நீ எப்பவாவது விமானத்தில் போயிருக்கியா? என்று கேட்க, இல்லை சார் என்று இருவரும் சொன்னாராம். உடனே அப்போ டிரெயின் டிக்கெட் கேன்சல் பண்ணிட்டு எல்லாரும் பிளைட்ல போறோம் என்று சொல்லி இருந்தாராம். முதல் முதலில் என்னை பிளைட்டில் கூட்டிட்டு போனவரு ராஜ்கிரண் தான் என்றும் அந்த பேட்டியில் மாரிமுத்து பேசியிருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications