எதிர்நீச்சல் ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலனா? அப்போ இதை கவனிச்சீங்களா..? கதையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு எதிராக துப்பாக்கியோடு ஜீவானந்தம் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஜீவானந்தம் யார் என்பது பற்றியும் இவருக்கும் குணசேகரனுக்கும் இந்த அளவிற்கு பிரச்சனை வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜீவானந்தம் ஒருவேளை ஈஸ்வரியின் காதலனாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. ஏற்கனவே ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்தது. அதைத் தொடர்ந்து பட்டம்மாளின் சொத்து 40% இப்போது ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருக்கிறது.
இந்த நிலையில் ஜீவானந்தம் குணசேகரனின் கம்பெனியில் இருந்து கொண்டு குணசேகரின் மொத்த குடும்பத்தையும் மிரட்டி கொண்டிருக்கிறார். அதோடு குணசேகரனுக்கு இன்னும் பத்து நிமிடம்தான் இருக்கிறது என்று அதற்குள் நீ எடுக்கும் முடிவால்தான் உனக்கு இன்னும் எந்த சொத்தெல்லாம் மிச்சம் இருக்கிறது என்பதையே நான் சொல்வேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதுவரைக்கும் ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் இருந்த குணசேகரனுக்கு முதல் முறையாக ஜீவானந்தத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், ஜீவானந்தம் உண்மையில் யார் இந்த கதைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று அனைவருக்கும் கேள்விகள் வருகிறது. அதே நேரத்தில் ஜீவானந்தம் ஒருவேளை ஈஸ்வரியின் முன்னாள் காதலனாகத்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
காரணம் இப்போது உள்ள ஜீவானந்தம் ஏற்கனவே ஈஸ்வரியை காதலித்துக் கொண்டிருக்கும் போது இருந்த அந்த நபரின் ஹேர்ஸ்டைல் முதலியவற்றை பாலோ பண்ணுகிறார். அதோடு அப்போது ஈஸ்வரியின் காதலனாக வந்தவரும் தன்னை ஒரு புரட்சியாளர் என்றும் தான் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தட்டி கேட்கும் விதமாகத்தான் சுவற்றில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இப்போது ஜீவானந்தமாக இருப்பவரும் தான் சமூகப் போராளி,, தோழர் என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார்.
இதனால் ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் காதலனா? அப்படி மட்டும் இருந்தால் இனி குணசேகரனின் நிலைமை என்னாகும் ஏற்கனவே குணசேகரின் சொத்துக்களை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கும் நிலையில் இனி இவரிடம் இருந்து குணசேகரனால் சொத்துக்களை மீட்க முடியுமா? என்றெல்லாம் அதிகமான கேள்விகள் வருகிறது. இதற்கெல்லாம் விடைகள் இன்னும் ஒரு சில எபிசோடுகளில் தெரிந்து விடும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications