ஜிபி முத்துவால் கோபத்தில் அரிவாள் எடுத்த எதிர்நீச்சல் குணசேகரன்.. அடுத்த பிரச்சனையும் வந்தாச்சு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஜிபி முத்துவை சந்தித்திருக்கிறார்.
இருவரும் பேட்டியில் பேசிக்கொண்டிருக்கும் போது ஜி பி முத்து குணசேகரன் பற்றி கேள்வி கேட்ட கேள்விக்கு எதிர்நீச்சல் குணசேகரன் கோபமடைந்திருக்கிறார்.
அப்படி என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் எபிசோடுகள் மற்றும் நடிப்பு குறித்து அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலில் குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்து முதன்முறையாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இப்போது சின்ன திரையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர்.
தற்போதைய ட்ரெண்டிங் ஸ்டார் ஆக மாரிமுத்து இருக்கையில் சமீபத்தில் அவர் ஜி பி முத்துவை பேட்டி ஒன்றில் சந்தித்திருக்கிறார். அப்போது இருவரும் மாறி மாறி தங்களுடைய அனுபவங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் ஆரம்பத்தில் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். ஜி பி முத்துவிடம் உங்களுக்கு அதிகமான பெண் ரசிகைகள் இருக்கிறார்கள் அது எனக்கு பொறாமையாக இருக்கிறது. உங்களுடைய வயது என்ன இப்போதும் எப்படி பெண் ரசிகைகள் என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு ஜிபி முத்து, ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க எனக்கு பெண் ரசிகைகள் அதிகமா இருக்காங்கறது உண்மைதான். அதுக்கு காரணம் நான் என் பொண்டாட்டி பிள்ளைகள் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கேன். அதான் நிறைய பெண்களுக்கு புடிச்சிருக்கு அதனாலதான் அவங்க எனக்கு ரசிகர்களாக இருக்காங்க வேற ஒன்னும் பெருசா நான் செய்யல என்று கூறுகிறார்.
அதைக் தொடர்ந்து மாரிமுத்து ஜிபி முத்துவிடம் ஆரம்பகாலகட்டத்தில் நேருவுக்கு அவருடைய மகள் கடிதம் எழுதியதும் அதுபோல பல முக்கிய தலைவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர்களும், சமுதாயத்தில் பிரபலங்களும் கடிதம் எழுதி வந்தனர். ஆனால் அது போலவே உங்களுக்கும் பலர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்களே என்று கேட்க, அவங்க எழுதினது எல்லாம் வேற மாதிரி ஒரு அர்த்தம். அது முக்கியமானதாகவும், போற்றக்கூடியதாகவும் இருக்கிறது ஆனால் எனக்கு வர்ற கடிதம் எல்லாம் அப்படி இல்ல. என்னை திட்டியும் அசிங்க அசிங்கமா பேசி தான் அந்த கடிதங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அதனால் அந்த இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டாம் என்று ஜிபி முத்து கூறியிருக்கிறார்.
அதோடு நீங்கள் மீசை வச்ச குழந்தையா தான் இருக்கீங்க என்று ஜிபி முத்துவை பார்த்து மாரிமுத்து பேசிக் கொண்டிருக்கையில் அப்படியெல்லாம் இல்லைங்க என்று ஜிபி முத்து சிரித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நீங்க யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா? அத பத்தி சொல்லுங்க என்று மாரிமுத்து கேட்க அது எல்லாருக்கும் ஒரு தனிப்பட்ட விஷயம் இருக்கும் அதை எல்லார்கிட்டயும் சொல்ல முடியாது. நீங்கள் தான் ஒரு பொண்ணுக்கு நம்பர் கொடுத்தீங்க அதை நான் பத்தி நான் கேட்டேனா? என்று கூறுகிறார்.
அதற்கு மாரிமுத்து அது ட்விட்டரில் ஒரு பொண்ணு என்கிட்ட நம்பர் கேட்டுச்சு நான் கொடுத்தேன் இதுல என்ன தப்பு இருக்கு என்று பேசுகிறார். மேலும் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது வாக்குவாதம் முற்றியது போன்றும் அங்கு இருக்கும் அருவாளை எடுத்து சண்டை போடுவது போன்றும் நடித்துக் கொண்டிருக்கிறனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஐயோ என்னாச்சு என்று ஆர்வத்தோடு கேள்வி கேட்கையில் அங்கே ஒன்றும் ஆகவில்லை. எல்லாமே நடிப்புதான் கோபால் என்று சொல்லுகிற மாதிரி தான் பண்ணுகிறார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கின்றனர்












Click it and Unblock the Notifications