சொந்த கிராமத்திற்கு வந்த நடிகர் மாரிமுத்து உடல்.. மாற்றுத்திறனாளி ரசிகைகள் செய்த நெகிழ வைத்த காட்சி
சென்னை: இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் அவர் சென்னையில் வாழ்ந்த சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று மூன்று மணி வரைக்குமாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதைத்தொடர்ந்து அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள பசுமலை தேரிக்கு இன்று காலை 6:00 மணிக்கு கொண்டுவரப்பட்டது.
நடிகர் மாரிமுத்துவின் திடீர் மறைவு அவருடைய உறவினர்களை மட்டுமல்லாமல் சின்னத்திரை வெள்ளித்திரை என சினிமா ரசிகர்களையும், நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அடைய வைத்து அதிலிருந்து மீள முடியாமல் பலரும் அதிர்ச்சியிலே இருக்கின்றனர். அது குறித்து அதிகமானோர் தங்களுடைய வருத்தங்களை தொடர்ச்சியாக இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
நல்லபடியாக பேசி சிரித்து கொண்டிருந்த மனிதன் திடீரென்று இறந்து விட்டார் என்று சொன்னதை நம்ப முடியாமல் ரசிகர்களே தவித்து வரும் நிலையில் அவருடைய சொந்த குடும்பம் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் உடல் அவருடைய சொந்த ஊரான பசுமலை தேரி கிராமத்திற்கு இன்று அதிகாலை 6:00 மணிக்கு கொண்டுவரப்பட்டது.
மாரிமுத்துவின் உடலை கண்டதும் அவருடைய கிராமத்தினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. அவருடைய சொந்த ஊரில் சுமார் 60 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். அனைவருமே மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுது அவருடைய நினைவுகளை பகிர்ந்த வண்ணமாக இருக்கின்றனர்.

அத்தோடு இன்று 11 மணிக்கு மேலே அவருடைய உடல் பக்கத்தில் இருக்கும் மயானத்தில் அவர்களுடைய குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அவருடைய உடலை காண்பதற்காக எதிர்நீச்சல் சீரியலை அவரை பார்த்து ரசித்த இரண்டு மாற்றுத்திறனாளி சகோதரிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் இருந்து தேனியில் இருக்கும் பசுமலை தேரி கிராமத்திற்கு வந்திருக்கின்றனர்.

அவர்கள் நடிகர் மாரிமுத்து தங்கள் வீட்டில் உள்ள ஒரு நபர் போல பார்த்து பழகி விட்டோம் என்று கூறி கதறி அழுதது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. மாரிமுத்துவின் அம்மாவும் அவருடைய சகோதரிகளும் மாரிமுத்துவின் உடலை கண்டதும் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுது கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications