மாரிமுத்துவின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல.. நடிகர் பிரசன்னா சொன்ன வார்த்தை.. கண்ணீரோடு ரசிகர்கள்
சென்னை: நடிகராகவும் இயக்குனராகவும் பிரபலமடைந்த மாரிமுத்து நேற்று காலமானார். டப்பிங் பணியின் போது ஏற்பட்ட அசௌகரியத்தை தொடர்ந்து அவரே மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்று அட்மிட் ஆகி இருக்கின்றார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய உயிர் சில நிமிடங்களில் பிரிந்தது.

அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து மாரிமுத்துவின் உடல் மதியம் மூன்று மணி வரை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு சொந்த ஊர் தேனி மாவட்டம் எடுத்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் அவருடைய மறைவிற்கு பல பிரபலங்கள் வருத்தங்களை தெரிவித்து வந்தனர். அதில் மாரிமுத்துவின் இயக்கத்தில் நடித்த நடிகர் பிரசன்னா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் மாரிமுத்து ஆரம்ப காலகட்டத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்து படாத பாடு எல்லாம் பட்டு பெரும் கஷ்டங்களுக்கு இடையே தான் உதவி இயக்குனராக மாறி இருந்தார். ஒரு சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக சில இயக்குனர்களுடன் பணியாற்றி விட்டு சொந்தமாக இரண்டு படங்களையும் இயக்கியிருந்தார்.
ஆனால் அவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. என்றாலும் அதைத் தொடர்ந்து நடிகராக கொண்டு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நிலையில் தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய கேரக்டருக்கு தகுந்த மாதிரி தன்னுடைய திறமையின் மூலமாக அந்த கேரக்டரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைய செய்த மாரிமுத்து நேற்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் இயக்கத்தில் கண்ணும் கண்ணும் புலிவால் ஆகிய இரண்டு படங்களில் நடித்த பிரசன்னா தன்னுடைய twitter பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் மாரிமுத்துவின் மறைவுக்கு செய்தியை கேட்டு மிகவும் துயரப்படுகிறேன். நாங்கள் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய இரண்டு படங்களில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றினோம். சகோதரர்கள் போல பழகி வந்தோம். பல விஷயங்களில் எங்கள் இருவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. ஆனால் அவருடைய வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல.
இறுதியாக அவர் நடிகராக நன்றாக நடித்து வந்தார்.. இன்னும் சில காலம் அவர் அதில் தொடர்ந்து இருக்க வேண்டும் என அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் போயிட்டு வாப்பு.. என்று பதிவிட்டு இருந்தார். தற்போது இதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களையும், மாரிமுத்து பற்றிய நினைவுகளையும் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications