பிக் பாஸில் “எதிர்நீச்சல்” குணசேகரன்? அவரே கொடுத்த விளக்கம்.. கடைசியில் சொன்னது ஹைலைட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.

அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்களா? என்று நடிகர் மாரிமுத்து விடும் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார்.
யாருக்கு எப்போது சரியான வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அந்த மாதிரி தான் பல வருடங்களாக உதவி இயக்குனராக இருந்து, இயக்குனராக மாறி, நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் மாரிமுத்துவிற்கு தற்போது சின்ன திரையில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பல வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் நடிகர் மாரிமுத்துக்கு இதுவரைக்கும் கிடைக்காத பேரும் புகழும் எப்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் கிடைத்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ட்ரெண்டிங் ஸ்டாராகவும், தங்க் லைஃப் மன்னனாகவும் நடிகர் மாரிமுத்து மாரி இருக்கிறார். அத்தோடு மீம்ஸ்களிலும் இவருடைய டயலாக் மற்றும் எக்ஸ்பிரஷன் தான் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். அப்போது கூட தியேட்டரிலும் இவருடைய அறிமுகம் வரும்போது ரசிகர்கள் "குணசேகரன்" என்று கத்துகின்றனர். அந்த அளவிற்கு இவருக்கு குணசேகரன் மூலமாக பிரபலம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இவர் தனியார் youtube சேனல் மூலமாக ஃபேன்ஸ் மீட்டிங் வைத்திருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது
அதில் நடிகர் மாரிமுத்துவிடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு பெண் மாரிமுத்துவிடம், "நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா?" என்று கேள்வி கேட்டபோது, அப்படி ஏதேனும் செய்திகள் வலம் வருகிறதா? இந்த சீசனில் மாரிமுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்று யாரேனும் சொன்னார்களா? என்று அந்த பெண்ணிடம் மாரிமுத்து கலகலப்பாக கேள்வி கேட்கிறார்.
அதற்கு அந்த பெண், அப்படியெல்லாம் இல்ல நீங்க ஒருவேளை உங்களிடம் அப்படி பேச்சு வார்த்தை நடத்தினாங்களா, நீங்கள் கலந்து கொண்டால் அங்கு நடக்கும் அநீதிகளுக்கு எப்படி ரியாக்சன் செய்வீங்க? என்று கேள்வி கேட்க, அதற்கு மாரிமுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த அநீதியும் நடக்கல.. அங்க எல்லா விதமும் நடக்கிறது. அதற்கு என்னுடைய நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்.
ஒருவேளை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் நான் கலந்து கொள்ளும் சீசன் இருக்கும். ஆனால் என்னால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது. எனக்கு ரெண்டு மூணு நாட்கள் கூட இப்போது எங்கேயும் போக முடியாது. காரணம் எதிர்நீச்சல் இப்போ ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் தொடங்கி விட்டதால் அதற்கான சூட்டிங், எடிட்டிங், டப்பிங் என முழு நாட்களும் நான் பிசியாக இருக்கிறேன். அதனால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று அந்த பேட்டியில் நடிகர் மாரி கூறி இருக்கிறார்.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications