எதிர்நீச்சல்: 70 இல் 50 கொண்டாடிய அம்மா.. வித்தியாசமாக வாழ்த்து சொன்ன குணசேகரன்.. நக்கல் மாறலையே!
நடிகை சத்யபிரியா தன்னுடைய 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அம்மா கேரக்டரில் நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய 70 வது பிறந்த நாளையும் அதே நாளில் தான் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நாளையும் ஒன்றாக சத்தியபிரியா கொண்டாடி இருக்கிறார்
எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சியாக நடிக்கும் சத்யபிரியாவுக்கு மூத்த மகன் குணசேகரன் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.

எதிர்நீச்சல் விசாலாட்சி
நடிகை சத்யபிரியா பல வருடங்கள் கழித்து எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக மீண்டும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். நடிகை சத்யபிரியா முதல் முதலாக "மஞ்சள் முகமே வருக" என்றும் திரைப்படத்தின் மூலமாக விஜயகுமாருக்கு ஜோடியாக திரைப்படங்களில் அறிமுகமாகி இதுவரைக்கும் 350 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சின்ன திரையிலும் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வரும் இவர் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல் என்றால் அது கோலங்கள் சீரியலாகவும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலாகவும் இருந்து வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் நடிகை சத்யபிரியாவின் பிறந்தநாள் வெகு விமர்சனமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இவர் கோலங்கள் சீரியலில் தன்னோடு நடித்த பிரபலங்கள் மற்றும் தன்னுடைய திரை துறை நண்பர்கள் பலரையும் தன்னுடைய பிறந்தநாள் பங்க்ஷனுக்கு கூப்பிட்டு இருக்கிறார். இவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை அரேஞ்ச் செய்தது அவருடைய மருமகள் தானாம். அந்த பிறந்த நாளில் சத்தியபிரியாவிற்கு பல இன்ப அதிர்ச்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நெருங்கிய நண்பர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.

விசாலாட்சியின் மனமாற்றம்
கோலங்கள் சீரியலில் கற்பகமாக அமைதியின் சொரூபமாக இருந்த சத்யபிரியா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் தனக்கு நெகட்டிவ் கேரக்டர் வேண்டும் என்று அதே திருச்செல்வனிடம் இவராகவே கேட்டு வாங்கி தான் இந்த விசாலாட்சி கேரக்டரில் நடித்து வருகிறாராம். குணசேகரனுக்கு அம்மாவாக நடித்து வரும் விசாலாட்சிக்கு நடிக்க சொல்லியே கொடுக்க வேண்டாம். கதையில் பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறார். தன்னுடைய மகன் குணசேகரன் என்ன செய்தாலும் சரி என்று ஆரம்பத்தில் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு திமிராக மருமகளை அடக்கி கொண்டிருந்த விசாலாட்சி தற்போது தன்னுடைய மகன் ஆதிரை விஷயத்தில் செய்யும் செயல்கள் தவறு என்பதை புரிந்து மனம் மாறிக் கொண்டிருக்கிறார்.

மூத்த மகன் வாழ்த்து
இந்த நிலையில் நடிகை சத்யபிரியாவின் பிறந்தநாளுக்கு எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய மூத்த மகனாக நடிக்கும் குணசேகரன் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். அதில் இன்று அம்மா 70தில் 50 கொண்டாடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய 70 வது பிறந்தநாளில் அவர் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்து 50 வருடங்களையும் எட்டியிருக்கும் கொண்டாட்டத்தையும் சேர்த்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய திறமைக்கும் அனுபவத்திற்கும் முன்பு நாம் குறைவு தான் அவருடைய வயது என்னை விட அதிகமாக இருப்பதால் நான் அவருக்கு வாழ்த்து கூற முடியாது. அதனால் அவரை ஓரமாக நின்று பார்த்து வியக்கிறேன் இன்று போல எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என ஒரு மூத்த மகனாக அம்மாவிற்கு வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications