ஜீ தமிழ் பிரைம் டைம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியல் கரிகாலன்.. இனி அசத்தல் தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் கேரக்டரில் பிரபலம் அடைந்த நடிகர் விமல் குமார் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு பிறகு சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சொக்கத்தங்கம் என்ற புது சீரியலில் முக்கிய கேரக்டரிலும் விமல் குமார் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திறமையும், உழைப்பும் இருந்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்று இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகர் விமல் குமார் நிரூபித்திருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு வேலைகளில் இருந்து எதிர்நீச்சல் சீரியல் மூலமாக ஒரு நடிகராக பிரபலமடைந்த விமல் குமார் அந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். முதல் சீரியலில் இவர் வில்லனா? காமெடியனா! என்று குழம்பி போகும் வகையில் காமெடி வில்லன் கேரக்டரில் பட்டையை கிளப்பி இருந்தார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்நீச்சல் சீரியல் திடீரென முடிவுக்கு வந்ததும் அந்த சீரியலுக்கு பிறகு விமல் குமார் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சொக்கத்தங்கம் என்ற புது சீரியலில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த சீரியலுக்கான பூஜை கடந்த மாதமே நடைபெற்று விட்டது. இந்த நிலையில் தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய கேரக்டரில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
விழுப்புரம், திருவண்ணாமலையில் நெகிழ்ச்சி.. மழையிலும் விஜய் நட்சத்திர கொண்டாட்டத்தை ரசித்த மக்கள்
ஏற்கனவே கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் பிரபலமடைந்த ஜெனிஃபர் களம் இறங்கி இருக்கிறார். அவர் வந்த பிறகு சீரியல் வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்போது கரிகாலன் கேரக்டரில் நடித்த நடிகர் விமல் குமாரும் நடிக்க இருப்பதால் சீரியல் இனி எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதே நேரத்தில் விமல் குமாரின் சொந்த ஊர் திருநெல்வேலி தானாம். இவர் திருநெல்வேலியில் அண்ணா யுனிவர்சிட்டியில் ப்ரோபோசராக ஒரு வருடம் ஒர்க் பண்ணி இருக்கிறாராம். இவர் BE ஸ்டூடண்டுகளுக்கு கிளாஸ் எடுத்து இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இவருடைய வீட்டில் இவர் கவர்மெண்ட் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் இவர் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் விமல் குமாருக்கு ஆரம்பத்தில் இருந்தே கிரிக்கெட்டில் தான் அதிகமாக இன்ட்ரஸ்ட் இருந்திருக்கிறது.
கிரிக்கெட் மீது இவருக்கு இருந்த ஆசையினால் தான் இவர் காலேஜ் லட்சராக மாறி இருக்கிறார். இவருடைய நண்பர்கள் கூட இவரை நெல்லை எக்ஸ்பிரஸ் விமல் குமார் என்று தான் கூறிக் கொண்டிருப்பார்களாம். அந்த அளவிற்கு இவர் வேகமாக பந்து வீசுவாராம். அதே நேரத்தில் இவருக்கு வயது அதிகமாக தொடங்கிய பிறகு தான் இவருக்கு தன்னால் டி என் பி எல், ஐபிஎல் உள்ளே போவதற்கு வயதை கடந்து விட்டோம் என்பதை தெரிந்து கொண்ட பிறகுதான் இவர் காலேஜில் மாணவர்களோடு விளையாடலாம் என்று வேலைக்கு சேர்ந்தாராம்.

அதே நேரத்தில் மீடியாவில் இவர் பார்ட் டைம் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாராம். அப்போது தான் இவருடைய அப்பா இவருக்கு ஆல் இந்தியா வானொலியில் ஆர் ஜே வாக வேலைக்கு அப்ளிகேஷன் வாங்கி கொடுத்திருக்கிறார்.அதில் இவர் செலக்ட் ஆகி இருக்கிறார். திருநெல்வேலியில் ஆல் இந்தியா வானொலியில் இவர் ஆர்.ஜேவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான பிரபலங்களின் மரணத்திற்கு இவர் இரங்கற்பா எழுதுவாராம். அப்போது அங்கே இருந்தவர்கள் இவரிடம் துர்தர்ஷனில் ஒரு கவிதை போட்டி நடக்கிறது அதில் கலந்து கொள்ள கூறி இருக்கிறார்கள்.
அந்த கவிதை போட்டியில் விமல் குமாரும் கலந்துகொண்டு இவர் எழுதிய கவிதைக்கு நான்காயிரம் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. இவர் அவரே எழுதிய கவிதை என்பதால் அதை மனப்பாடமாக கூறியிருக்கிறார். அதனால் இவரை துர்தர்ஷனில் ஆங்கரிங் பண்றீங்களா என்று கேட்டார்களாம் இவரும் சரி என்று அங்கே வேலை செய்திருக்கிறார்.
அதற்குப் பிறகு ஆர்ஜே, விஜே என்று இவர் 300க்கும் மேற்பட்ட இன்டர்வியூஸ் எடுத்து இருக்கிறாராம். அந்த நேரத்தில் பண விஷயத்தில் அதிகமாக கஷ்டத்தில் தான் இருந்திருக்கிறார். வீட்டில் இருந்தும் இவர் தான் சினிமாவில் நடிக்கப் போவதாகும் தன்னுடைய விருப்பத்தின் பேரில் தன்னுடைய வாழ்க்கையை நோக்கி செல்ல இருக்கிறேன் என்று கூறியதால் பெரிய அளவில் பணத்தை எதிர்பார்க்க முடியாமல் இருந்திருக்கிறார்.
ஆனால் ஒரு இன்டர்வியூ எடுக்க போகிறோம் என்றாலும் அதில் கிடைக்கும் பணம் சாப்பாட்டிற்கு சரியாக போய்விடுமாம் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்திற்காக இவர் போட்டோ சூட் எடுக்க வேண்டும் என்றால் கூட அதற்கு உடை விஷயத்திற்காக அதிகமான கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கிறதாம். அதற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக பல்வேறு போராட்டங்களை தாண்டி தான் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்று ஒரு பேட்டியில் விமல் குமார் கூறி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications