அதே எதிர்நீச்சல் வீட்டில் இருந்து வீடியோ போட்ட ஹரிப்பிரியா.. அப்போ சம்பவம் உறுதி! இதை கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஹரி பிரியா எதிர்நீச்சல் சீரியலில் காட்டப்பட்ட வீட்டில் இருந்து புது வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி, நடித்து இருந்தார். இந்த சீரியலில் நடிகை மதுமிதா கதாநாயகியாக நடித்திருந்தார். அதுபோல மற்ற கதாநாயகிகளாக நடிகை கனிகா, ஹரிப்பிரியா மற்றும் பிரியதர்ஷினி என பல நடிகைகள் நடித்திருந்தனர். இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

அதிலும் இந்த சீரியலில் வில்லனாக நடித்த மாரிமுத்துவிற்க்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ஆனால் திடீரென்று மாரிமுத்து இந்த சீரியலில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது நெஞ்சு வலி ஏற்பட அவர் மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில் அங்கு காலமானார். அதற்குப் பிறகு சீரியலின் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது.
செல்போனில் மலர்ந்த காதல்.. மகனுக்கு ஜப்பானில் திருமணம் இதற்காகத்தான்.. நெப்போலியன் மனைவி ஓபன்
அதன் காரணமாகவே அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகமான விமர்சனங்களையும் சந்தித்து வந்தது. அந்த நேரத்தில் திடீரென்று இந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சீரியல் முடிவு அடைந்ததை சீரியல் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக இந்த சீரியலின் இரண்டாவது பாகம் வர வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வந்தனர்.
அதற்குப் பிறகு இயக்குனர் திருச்செல்வம் பேட்டிகளில் பேசும்போது எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகம் கண்டிப்பாக வரும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை ஹரிப்பிரியா எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய தூணாக இருந்த வீட்டில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

ஹரிப்பிரியா பேசிய அந்த வீடியோவில் இயக்குனர் திருச்செல்வம் புதியதாக தொடங்கிய youtube சேனல் பற்றியதாக இருந்தாலும் அவர் நந்தினி கேரக்டரில் எப்படி இருப்பாரோ அதுபோல காஸ்ட்யூமில் இப்போது வெளியிட்ட வீடியோவில் இருக்கிறார்.
இதனால் எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் தொடங்கிவிட்டது என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த மதுமிதா நான் இந்த சீரியலில் இரண்டாவது பாகத்தில் நடிக்கவில்லை என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அவருக்கு பதிலாக ஜீ தமிழில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை தான் இனி எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார் என்று தகவலும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் பழைய வீட்டில் பழைய நந்தினி போலவே இப்போது காஸ்ட்யூமில் இருக்கும் ஹரிப்பிரியா வீடியோ வெளியிட்டு இருப்பதால் அப்போ முதல் பாகத்தில் இருந்தது போல தான் இரண்டாவது பாக கதையும் இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகிறது.












Click it and Unblock the Notifications