செல்போனில் மலர்ந்த காதல்.. மகனுக்கு ஜப்பானில் திருமணம் இதற்காகத்தான்.. நெப்போலியன் மனைவி ஓபன்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ்க்கு நாளை ஜப்பானில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு தன்னுடைய மகன் திருமணம் மற்றும் மருமகள் குணத்தைப் பற்றி நெப்போலியன் மனைவி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நான்கு வயதிலேயே தன்னுடைய மகளுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசி பலருக்கும் முன்மாதிரியாக நெப்போலியன் குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள்.

தன் மகன் உடல்நிலை பிரச்சனையை மூடி மறைக்க விரும்பாமல் தன்னுடைய மகனின் சந்தோஷத்திற்காகவே நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் நாளை தன்னுடைய மகனுக்கு ஜப்பானில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது.
அதற்காக பல பிரபலங்களும் ஜப்பானுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் உட்கார்ந்து இருக்கும் நெப்போலியன் மகனுக்கு திருமணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள் என்று இணையத்தில் அதிகமானோர் நெகட்டிவ்வாக பேசி வந்தனர்.
அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தனுஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். என்னை பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்டுகள் வருகிறது. அதைப் பற்றி எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னால் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நான் நிரூபிக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
அதோடு பணத்திற்காக தான் அந்தப் பெண் திருமணம் செய்கிறார் என்றும் சிலர் நெகட்டிவ் ஆக பேசிக்கொண்டு இருந்தார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நெப்போலியனின் மனைவி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் என்னுடைய மருமகள் அக்ஷயா எங்களுடைய வாழ்க்கைக்குள் வந்த பிறகு என்னுடைய மகன் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே என்னுடைய மகனைப் பற்றி எல்லாமே தெரியும். நாங்கள் எதையும் மறைக்காமல் அவரிடம் எல்லாம் சொல்லித்தான் அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். என்னுடைய மருமகளும் மகனும் அதிகமாக செல்போனில் மெசேஜ் செய்து கொள்வார்கள். போனில் பேசுவதை விடவும் இவர்கள் இருவரும் சேட்டிங் செய்வார்கள்.
இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட பிறகு தான் திருமணத்திற்கு நாங்கள் வேலைகளை பார்க்க தொடங்கினோம். அதுபோல அமெரிக்காவில் நாங்கள் வசித்து வந்தாலும் ஜப்பானில் கல்யாணம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னுடைய மகன் சொன்ன காரணம் தான். அவன் சில வருடங்களாகவே நான் ஜப்பானுக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் இப்போது திருமணம் முடிவு செய்யப்பட்டதும் திருமணத்தை ஜப்பானில் நடத்திவிட வேண்டும் என்று அவன் தான் சொன்னான். அவன் சொன்னதற்காக தான் நாங்களும் திருமணத்தை ஜப்பானில் நடத்த ஒப்புக்கொண்டோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதும் என்னுடைய மருமகள் இங்கு என்ன சாப்பாடு கிடைக்கும் என்று கொஞ்சம் பயப்பட்டார்.
ஆனால் அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து முடித்து விட்டோம் என்று நெப்போலியன் மனைவியான ஜெயசுதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதோடு தன்னுடைய மகன் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போது இப்போதுதான் நானும் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன். அவன் எப்போதும் சிரித்த முகமாக இருக்க வேண்டும் என்று மற்ற அம்மாக்களைப் போல நானும் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications