எதிர்நீச்சல் கனிகாவிற்கு என்ன ஆச்சு? முகம் எல்லாம் இப்படி இருக்கே! அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் பிரபலமடைந்த நடிகை கனிகா தன்னுடைய முகமெல்லாம் தீயால் ஏற்பட்ட காயம் போன்று இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமான கருத்துக்களை பெற்று வரும் நிலையில் இது கோட் திரைப்பட சூட்டிங் புகைப்படங்கள் தான் என்று கனிகா விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. இது திரைப்படத்திற்கு தியேட்டரில் ரசிகர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். சின்ன சின்ன ரோலில் கூட முன்னணி நடிகர்கள் வந்தது இந்த திரைப்படத்தில் பிளஸ் ஆகவே பார்க்கப்படுகிறது.

மறைந்த நடிகர் விஜயகாந்த் ஒரு காட்சியில் வந்திருக்கிறார். அதுபோல நடிகர் சிவகார்த்திகேயன், தோனி, அஜித் குரல் என்று பல ஸ்பெஷல் இந்த திரைப்படத்தில் இருக்கிறது. இந்த வரிசையில் இந்த திரைப்படத்தில் சின்ன கேரக்டராக இருந்தாலும் படத்திற்கு முக்கிய கேரக்டராக கனிகாவின் கேரக்டர் தான் இருந்தது. நடிகை கனிகா தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்து இருந்தார். ஆனால் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் சினிமாவை விட்டு திடீரென்று விலகி இருந்தார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் டப்பிங் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார். அதோடு அழகாக பாடும் இவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தது இவருடைய ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்தது.

இணையத்தில் படுபிசியாக இருக்கும் கனிகா சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்திருந்தார். ஈஸ்வரி கேரக்டரை கூட ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இவர் நடிகர் மாரிமுத்துவுக்கு மனைவி என்பதை அந்த நேரத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்கள் செல்ல சொல்ல கதையின் ஆழத்தை புரிந்து ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் அதற்கு பிறகு நடிகர் வேலராமமூர்த்தி மாரிமுத்து நடித்த குணசேகரன் கேரக்டரில் நடித்த போது தான் அதிகமாக ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள்.
எது எப்படியோ அந்த சீரியல் இப்போது முடிந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கும் கனிகா கோட் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். 10 நிமிடங்கள் கூட வராத கேரக்டராக இருந்தாலும் இவரால்தான் அந்த திரைப்படத்தில் கதையே வந்தது என்று சொல்லலாம். அதாவது மோகனுக்கு ஜோடியாக இவர் தான் அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார். இவருடைய கொலைக்காக தான் மோகன் விஜய்யை பழிவாங்குவார்.

கோட் படத்தில் கனிகா நடிக்கும் விஷயத்தை வெங்கட் பிரபு ரகசியமாக வைத்திருந்தாலும் சில மாதங்களுக்கு முன்பே கனிகா வெங்கட் பிரபுவோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதும் இவரும் இந்த திரைப்படத்தில் இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்விகள் எழுப்பி வந்தனர். அதற்கு பதில் சொல்லாமல் இருந்த கனிகா இப்போது தனக்கு வாய்ப்பு தந்ததற்காக வெங்கட் பிரபுவுக்கு நன்றி கூறி இருக்கிறார். கோட் திரைப்படத்தில் கனிகாவிற்கு ட்ரெயினில் நடந்த விபத்தில் முகமெல்லாம் வெந்து போவது போன்ற காட்சிகள் இருக்கிறது. அதற்காக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தான் கனியாக இப்போது பகிர்ந்து இருக்கிறார். ஆனால் இது தெரியாத ரசிகர்கள் கனிகாவின் முகத்திற்கு என்ன ஆச்சு என்று பதறி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான்












Click it and Unblock the Notifications