சாலை விபத்து! சர்ச்சைகளுக்கு புகைப்படத்தோடு திடீர் விளக்கம் கொடுத்த எதிர்நீச்சல் மதுமிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் காரில் போகும்போது விபத்து ஏற்படுத்தியதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் அதை மறுப்பு தெரிவித்து மதுமிதா போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு மதுமிதா காரில் தன்னுடைய நண்பரோடு போய்க் கொண்டிருக்கும் போது எதிரே வந்த போலீஸ்காரரின் வாகனத்தின் மீது மோதி விட்டதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு மதுமிதா விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

 Ethirneechal Serial Actress Madhumitha gave a sudden explanation to the Road accident controversies

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகி ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே கன்னட சீரியலில் நடித்து பெயர் வாங்கி இருக்கிறார். முதல் முறையாக கன்னட சீரியலில் நடித்திருந்த மதுமிதாவிற்கு சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. முதல் சீரியலிலேயே இவருக்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர்.

இதனால் இவர் இப்போது தமிழ் சீரியலில் மட்டும் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் வெளியிட்டு இணையதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அதுபோல தன்னுடைய ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இவர் அடிக்கடி எதிர்நீச்சல் நடிகர்களோடு ரீல்ஸ் வீடியோக்களை போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கிறார்.

அதோடு இந்த சீரியலில் பெண்களின் முன்னேற்றத்தை பற்றியதாக கதை இருக்கும் நிலையில் இவர் கதாநாயகியாக பெண்களுக்கு அடிக்கடி மோட்டிவேஷனும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான வேலையில் தான் சில தினங்களுக்கு முன்பு இவர் பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியது.

அதாவது சோழிங்கநல்லூர் பகுதியில் இவரும் இவருடைய ஆண் நண்பரும் காரில் வேகமாக சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது எதிரே வந்த போலீஸ்காரரின் வாகனத்தில் பைக்கில் இவருடைய கார் மோதியதால் போலீஸ்காரருக்கு அடிபட்டு விட்டதாகவும் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் மதுமிதா மற்றும் அவருடைய நண்பரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு போனதாகவும் அதில் கூறப்பட்டது.

இந்த நிலையில் மதுமிதா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், "நண்பர்களே என்னை பற்றி சமீபத்தில் ஒரு வதந்தியான செய்தி பரவி வருகிறது. அது எல்லாம் உண்மையே கிடையாது. நான் நலமாக இருக்கிறேன். தவறான செய்திகளை நம்பாதீர்கள்" என்று அதில் கூறியிருக்கிறார். அதோடு அவர் நகைக்கடை ஒன்றில் கெஸ்ட் ஆக போயிருக்கும் வீடியோவையும் அந்த ஸ்டோரியில் பகிர்ந்து பகிர்ந்து இருக்கிறார்.

 Ethirneechal Serial Actress Madhumitha gave a sudden explanation to the Road accident controversies

அதுபோல நகைக்கடையில் இவர் போட்டோ சூட் செய்வதையும் அதற்கு அடுத்த ஸ்டோரியில் மதுமிதா பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடியே அடுத்த ஒரு வீடியோவும் மதுமிதா வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னை பற்றி ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் நான் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டி ஆக்ஸிடெண்ட் செய்து விட்டேன் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது எதுவுமே உண்மை இல்லை. ஆனால் விபத்து நடந்தது உண்மைதான். அதுபோல அந்த போலீஸ் காரர் நன்றாக இருக்கிறார் நானும் நன்றாக இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் நடிகை மதுமிதா தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+