எதிர்நீச்சல் சீரியலை விட்டு விலகப் போகிறாரா ஆதிரை? அவரே வெளியிட்ட பதிவு! இப்படி ஒரு மாற்றமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் 'ஆதிரை' கேரக்டரில் "நடிகை சத்யா தேவராஜன்" நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் இவர் சீரியலில் இருந்து விலகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ச்சியாக நடிகை சத்தியா விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தான் புதிய ப்ராஜெக்டில் இனி நடிக்கப் போவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அதில் இந்த சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகை சத்யா தேவராஜனுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர் இந்த சீரியலில் ஆரம்பத்தில் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி அண்ணிமார்களை கொடுமைப்படுத்தும் கேரக்டரில் இருந்தாலும் பிறகு அதனுடைய சுயரூபம் தெரிந்து தன்னுடைய வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் நடிகை சத்யா தேவராஜன் ஆரம்பத்தில் "சன் மியூசிக்" நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வேலை பார்த்திருந்திருக்கிறார்.

அப்போதுதான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அருவி" சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது அந்த சீரியலில் இவர் நடிக்க தொடங்கிய ஒரு சில மாதங்களில் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு இவருக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லையாம்.
ஆனாலும் "இயக்குனர் திருச்செல்வம்" கதை என்பதால் நண்பர்களின் வற்புறுத்தலினால் இந்த சீரியலில் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு தான் மக்கள் மத்தியில் தனக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதை தான் புரிந்து கொண்டதாக ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இப்படியான நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் அவர் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

அதில், "தான் எதிர்காலத்தில் சில ப்ராஜெக்ட் செய்ய விருப்பம் இருப்பதாகவும் அதற்கு என்னிடம் கதை சொன்னவர்கள்.. அல்லது ஏதாவது கதை வைத்திருப்பவர்கள் எனக்கு டிஎம் செய்யலாம்" என்று கூறியிருக்கிறார். அதாவது தான் புதிய ப்ராஜெக்ட்டில் நடிக்க விரும்புகிறேன் என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள், "நீங்கள் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகப் போகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி வர அதற்கு சத்யா, "கண்டிப்பாக அப்படியெல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் புது ப்ராஜெக்ட்டிலும் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது"என்று கூற அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

அதுவும் இவர் முக்கியமான கதாநாயகியாகவே நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். அதுதான் நல்ல முடிவு என்று ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். ஏற்கனவே ஆதிரைக்கு சமீபத்தில் அதிகமான காட்சிகள் இல்லை. ஆனாலும் ஒரு சில காட்சிகள் வரும்போது அழுத்தமான வசனங்களில் தன்னுடைய நடிப்பை அழகாக காட்டி வருகிறார். இதனால் இவர் சீரியலில் முதன்மை கதாநாயகியாக நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்காக வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications