எதிர்நீச்சலில் நடிக்க விருப்பம் இல்லை..ஆனால்! “கில்லி” படத்தில் கவனிச்சீங்களா? TK.கலா உடைத்த ரகசியம்
சென்னை: பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் "டி.கே கலா" "கில்லி", "குருவி", "ஐ" போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் தான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் போது ஆரம்பத்தில் தனக்கு விருப்பம் இல்லாமல் தான் சம்மதம் சொன்னேன் என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

அந்த வகையில் சமீபத்தில் திரையரங்குகளில் கில்லி ரீ-ரிலீஸ் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு கில்லி திரைப்படம் வெளியான போது இருந்த எதிர்பார்ப்பை விட இப்போது இந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. மக்கள் கூட்டம் கில்லி திரைப்பட வெளியாகும் தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் அம்மாவாக நடித்த டி.கே கலா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் கில்லி திரைப்படத்தில் தான் முதல்முறையாக நடிக்க தொடங்கினேன். எனக்கு இந்த திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் தரணி தான் போன் பண்ணி கூப்பிட்டார். முதலில் நடிக்கப் போனதும் என்னுடைய காட்சிகள் சொன்னார். என்னுடைய காட்சிகள் நடிப்பது எனக்கு கஷ்டமாகவே இல்லை இயல்பாக இருந்தது.
அதில் ஒரு காட்சியில் திரிஷாவின் வீட்டில் எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும்போது நான் கூலாக, "நடந்தது நடந்து போச்சு... என்ன பண்ண அந்த சேரை எடுத்துப் போடு" என்று ஒரு டயலாக் பேசுவேன். அது பெரிய அளவில் மீம்ஸ்களாக வெளியாகி இருக்கிறது. ஆனால் அப்போது எனக்கு அது தெரியாது. அந்த நேரத்தில் நான் என்னுடைய மகனோடு வெளிநாட்டில் இருந்தேன். ஆனால் இப்போது அந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனதும் நான் பேசிய டயலாக்குகள் எல்லாம் மீண்டும் வைரலாகி கொண்டிருக்கிறது.
நான் வெளியே போகும்போது கூட பலர் நீங்க கில்லி திரைப்படத்தில் நடிச்சீங்களே என்று ஞாபகம் வைத்து பேசுகிறார்கள். அதுபோல இப்பொழுது நான் சின்னத்திரையிலும் களம் இறங்கி இருக்கிறேன். எதிர்நீச்சல் சீரியலில் முதலில் நடிக்கும் போது எனக்கு விருப்பம் இல்லாமல் தான் சம்மதம் சொன்னேன். இந்த சீரியலில் நடிக்க எனக்கு ஒரு முக்கியமான நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை மறுக்க முடியாமல் தான் நான் ஆரம்பத்தில் போனேன்.
ஆனால் அங்கு விருப்பம் இல்லாமல் தான் நடிக்க தொடங்கினேன். எனக்கு சீரியலில் நடிப்பதும் பெரிய அளவில் கஷ்டமாக இல்லை. இயல்பாக இருப்பது போன்று தான் இருக்கிறேன். என்னுடைய சொந்த ஊர் சென்னை தான். ஆனால் என்னுடைய அம்மாவின் உறவினர்கள் அதிகமானோர் திருநெல்வேலி பக்கம் உள்ள ராஜபாளையத்தில் இருந்து வீட்டிற்கு அடிக்கடி வருவதால் அவர்களிடம் பேசியே எனக்கு மதுரை பேச்சு பழகிவிட்டது.
அதனாலேயே எனக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. நான் பாடிய பாடல்கள் பல ஹிட் ஆகி இருக்கிறது. அதிலும் "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.." என்ற பாடல் இப்போது உள்ள பலராலும் பாராட்டப்பட்டு வருவது எனக்கு சந்தோசம் தான் என்று நடிகை டி.கே கலா கூறி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications