எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகி விஜய்டிவி சீரியலில் அறிமுகம்..அதுவும் இந்த சீரியலிலா? செம ட்விஸ்ட் தான்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலில் அதிகமான ரசிகர்களால் பாராட்ட பட்ட கேரக்டரில் இருந்து வந்த இவர் திடீரென்று இந்த முடிவெடுத்து விட்டாரே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அது வேற யாரும் இல்லை எதிர்நீச்சல் சீரியலில் வசு கேரக்டரில் நடிக்கும் வைஷ்ணவி தான்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து விட்டது. இதனாலையே இந்த சீரியல் தற்போது 400 எபிசோடுகளுக்கு மேலாக சக்சஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றனர்.
அந்த வகையில் ரசிகர்களின் மனங்கவர்ந்த கேரக்டர்களில் ஒருவராக நடிகை வைஷ்ணவி இருந்து வருகிறார் அவர் அந்த சீரியலில் வசு கேரக்டரில் நடித்து வருகிறார் ஜனனியின் நெருங்கிய தோழியாக இருந்து வரும் வசு ஜனனிக்கு பிரச்சனை வரும் நேரங்களில் எல்லாம் தோள் கொடுக்கும் ஒரு தோழியாகவும் குணசேகரனை தைரியமாக கேள்வி கேட்கும் ஒரு தைரியமான பெண்ணாகவும் இருந்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போது முதல் ஆளாக அங்கே வருவது வசுவாகத்தான் இருக்கும். அதனாலே ஜனனிக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகமாக வசுவிற்கும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் எனும் சீரியலில் நடிக்க இருக்கிறார் எனும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில் எப்பவாவது வந்து கொண்டிருக்கும் வைஷ்ணவி இனி கிழக்கு வாசல் சீரியலில் முழு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று தற்போது கேள்விகள் எழுந்து வருகிறது. வைஷ்ணவி அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் வெங்கட்ரங்கநாதன் அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடிக்கும் நடிகரோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் அப்போ வைஷ்ணவி தான் இந்த சீரியலில் வெங்கட்டிற்கு ஜோடியாக இருக்குமோ என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் பல பிரபலங்கள் இருக்கும் நிலையில் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications