எதிர்நீச்சலை விட்டு விலக முடிவு எடுத்த ஆதிரை.. அவரே சொன்ன காரணம் இதுதான் ..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த சீரியலால் தான் பட்ட கஷ்டம் குறித்து ஆதிரை கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்தியா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நடிகை சத்தியா தன்னுடைய சீரியல் அனுபவங்கள் குறித்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
நடிகை சத்தியா சொன்ன வார்த்தையை கேட்டு ரசிகர்கள் தொடர்ச்சியாக அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக ஒரு புரட்சி செய்யும் சீரியலாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு ஆண்கள் தரப்பிலும் அதிகமான வரவேற்பு மற்றும் ஆதரவு இருந்து வருகிறது. இந்த அளவிற்கு இந்த சீரியல் தொடர்ச்சியாக பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ஆதிரையாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சத்யா தேவராஜன் சமீபத்தில் பேட்டியில் இந்த சீரியல் பற்றி பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த சத்யாதேவராஜன் பிறகு முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் நடிகையாக மாறி இருக்கிறார். அருவி சீரியலில் ஒரு சில மாதங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியல் வேண்டாம் என்றுதான் நினைத்தாராம்.
ஆனால் பிறகு கதை கேட்டதும் இவர் உடனே சரி என்று சொல்லிவிட்டாராம். ஆனால் இப்போது நான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் என்னைவிட இந்த உலகத்தில் யாருமே முட்டாள் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எனக்கு கிடைத்த பெரிய ஒரு வாய்ப்பை நான் விட்டு விட பார்த்தேன். ஆனால் நல்லவேளையாக கடைசி நேரத்தில் நான் முடிவை மாற்றி இந்த சீரியலில் கமிட்டாகி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அதோடு நான் சீரியலில் பார்ப்பதற்கு தான் ஒரு டெரர் பீஸ் போல இருப்பேன். ஆனால் நிஜத்தில் ஜாலியான கேரக்டராக இருந்தாலும் சின்ன நெகட்டிவிட்டியை கூட தாங்கிக் கொள்ள மாட்டேன். ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் என்னுடைய கேரக்டர் தவறாக இருக்கும்போது பலர் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட எனக்கு அது பெரியதாக இல்லை .
ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஆதிரை காதல் ட்ரேக் முடித்து விடுங்கள். இது மோசமாக இருக்கிறது. என்றெல்லாம் என்னை பற்றி கண்டமேனிக்கு கமெண்ட்டுகள் குவிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து நான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். அதனால இந்த சீரியலை விட்டு விலகிடலாம்னு கூட நான் நினைச்சேன். எங்க செட்டிலிருந்த அனைவரிடம் கூட நான் இதுபற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பேன். எல்லோரும் எனக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
ஆனால் முதல்முறையா ஆதிரை மற்றும் கரிகாலன் கல்யாண நாள் அன்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சாதனை படைத்திருந்தது. ரசிகர்கள் எந்த அளவிற்கு நமக்கு ஆறுதல் தருகிறார்களே என்று அப்போ நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அதுபோல இப்போ எனக்கு அதிகமானோர் பாசிட்டிவ் ஆகவே கமெண்ட் போடுறாங்க. வெளியே போகும் போது கூட ஆதிரை என்று பேசி பலர் எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். இது எனக்கு சந்தோசமா இருக்கு என்று கூறியிருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications