எதிர்நீச்சலில் அப்பத்தா கைரேகை எடுத்தது.. விளக்கம் கொடுத்த இயக்குனர்.. இத்தனை ட்விஸ்ட் இனி இருக்காம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு கோமாவில் இருந்த அப்பத்தாவின் கைரேகைகளை எடுத்து ஜீவானந்தம் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றி இருந்தார்.
அது குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அது எதற்காக அப்படி செய்யப்பட்டது என்பது குறித்து சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அத்தோடு அந்த காட்சி எடுத்ததற்காக பிரபல வழக்கறிஞர் ஒருவர் தனக்கு பக்கம் பக்கமாக எழுதி அனுப்பியதாகவும் கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கிராமப்புறங்களில், நகரப்புறங்களிலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் நடந்த சில நிகழ்வுகள் உண்மைக்கு புறம்பாக இருக்கிறது. நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட முடியவில்லை என்று ரசிகர்கள் சில சீன்களை குறித்து கூறி வந்தனர்.
அதிலும் கோமாவில் இருந்த அப்பத்தாவின் கைரேகைகளை எடுத்த ஜீவானந்தம் பிறகு தன்னுடைய பெயருக்கு அப்பத்தாவின் 40% சொத்துகளை மாற்றியிருந்தார். இது குறித்து அதிகமாக இணையதளத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய பத்திரப்பதிவு நடைமுறைகள் தெரியாமல் சீரியல் தரப்பில் இருந்து இந்த மாதிரி ஒரு அபத்தமான காட்சிகள் எடுக்கப்பட்டதாக பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் எல்லோரும் பிற்பகுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரியாமலே முற்பகுதியில் நடந்து கொண்டிருப்பதை வைத்து கேள்வி கேட்டு வருகிறார்கள். இனி இதற்கான விளக்கத்தை நான் பிறகு தான் கொடுக்கப் போகிறேன். எதனால் அப்பத்தாவின் கைரேகை எடுக்கப்பட்டது என்பது பிறகு தெரியவரும். அதே நேரத்தில் நிஜ வாழ்க்கைக்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் அதிகமாக இருக்கிறது.
வாழ்க்கையில் பலரையும் கவர வேண்டும் என்பதற்காக சில சிக்கல்களை உடைக்க தான் வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் தெரியும் சில லாஜிக் சினிமாவில் பார்க்க கூடாது என்பது, அந்த மாதிரி தான் இந்த சீன் கூட அமைந்திருக்கிறது. கதையில் சுவாரசியத்திற்கு தகுந்த மாதிரி சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எங்களுக்கு தெரியாமல் ஒன்றும் அந்த மாதிரி காட்சிகளை வைக்கவில்லை. எனக்கும் பத்திரபதிவு அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். ஏனென்றால் நானும் அடிக்கடி பத்திரபதிவு அலுவலகத்திற்கு போயிட்டு வந்து தான் இருக்கிறேன்.
ஆனாலும் இது நான் தெரியாமல் இந்த காட்சிகள் வைத்து விட்டதாக கருதி வழக்கறிஞர் ஒருவர் பக்கம் பக்கமாக பத்திரப்பதிவு எப்படி எல்லாம் செய்ய வேண்டும் நீதிமன்றத்தில் அது குறித்த நடைமுறை சிக்கல்கள் என்ன என்றெல்லாம் எனக்கு எழுதி அனுப்பி இருக்கிறார். அதற்கு நான் சிரிக்க தான் தோன்றுகிறது.
நானும் சில காட்சிகள் வைப்பது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் வழக்கறிஞரிடம் பேசிவிட்டு தான் அதை செய்கிறேன். ஆனால் இந்த காட்சிகள் வைத்ததற்கான உண்மையான காரணம் இனிவரும் நாட்களில் தெரியவரும் என்று ஜீவானந்தமாக நடிக்கும் இயக்குனர் திருச்செல்வம் பேசியிருக்கிறார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications