எதிர்நீச்சல்: கதையை மாற்றிய குணசேகரன்.. கரிகாலன் போனில் எடுத்த எவிடன்ஸ்.. மாட்டிக்கிட்டியே பங்கு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் மீது ஈஸ்வரி மகளிர் ஆணையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்ததால் கடைசியில் குணசேகரன் கதையை மாற்றுகிறார்.
ஏற்கனவே கல்யாண பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது தர்ஷனுக்கு கல்யாணம் என்று குணசேகரன் சொல்லி மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கடத்தல் காட்சிகள் தான் ஒவ்வொரு நாளும் விதவிதமாக வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அப்பத்தா காணாமல் போய் இருக்கிறார். அதை தொடர்ந்து தர்ஷினி காணாமல் போய் இருக்கிறார். இப்போது தர்ஷினி கிடைத்திருந்தாலும் அவரும் தனக்கு என்ன நடந்தது என்பதை சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறார்.
அதை சாதகமாக வைத்துக் கொண்டு குணசேகரன் தர்ஷினிக்கு கல்யாணம் ஏற்பாடுகள் செய்திருக்கும் நிலையில் ஜனனியின் தங்கச்சியும் அம்மாவும் காணாமல் போய் இருக்கின்றனர். அவரை தேடி போன ஜனனியை ரவுடி கும்பல் கடத்தி இருந்தனர். அதே நேரத்தில் தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகும் ஜனனியின் அத்தை பையன் மற்றும் சக்தி கடத்தி வைத்திருக்கின்றனர்.
இப்படியாக இந்த சீரியலில் ஒரே கடத்தல் காட்சிகளும் கல்யாண போராட்டங்களும் தான் வந்து கொண்டே இருக்கிறது. கட்டாய கல்யாணமும் கடத்தல்களும் மட்டுமே இந்த சீரியலில் இப்போது இருக்கிறதே என்று ரசிகர்கள் பீல் பண்ணி வரும் நிலையில் கல்யாணத்தை நிறுத்துவதற்காக ஈஸ்வரி மகளிர் ஆணையத்தில் கம்ப்ளைன்ட் செய்து இருந்ததால் சில மகளிர் வீட்டிற்கு வந்து இருந்த நிலையில் நேற்று குணசேகரன் அவர்களிடம் எகிரி எகிரி பேசியிருந்தார்.

அதே நேரத்தில் என்னதான் பணம் பதவி என்று இருந்தாலும் அரசு அதிகாரிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து குணசேகரன் மரியாதை கொடுக்காமல் இருந்து வருகிறார். இதற்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்க்கவும் இருக்கிறது. ஏற்கனவே இருந்த குணசேகரன் (மாரிமுத்து) இது போன்று கிடையாது. போலீஸ் ஆபீசர்களிடம் கூட அவர் பயந்து தான் இருந்தாரே தவிர இவ்வளவு எதிர்த்து துள்ளிக் கொண்டு இருந்தது கிடையாது.
ஆனால் இப்போது இருக்கும் குணசேகரன் எதற்கும் பயப்படாமல் இருக்கிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஈஸ்வரி இடம் குணசேகரன் என் பொண்ணுக்கு கல்யாணம்னு யாரு சொன்னா? கல்யாணம் தர்ஷனுக்கு என் பையனுக்கு தான் கல்யாணம் என்று சொல்ல, மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகின்றனர். அதோடு ஈஸ்வரி நான் என்னுடைய பொண்ணுக்கு அவ இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழவைப்பேன் என்று சபதம் போடுகிறார்.
மறுபக்கத்தில் சக்தி உமையாளின் மகனை போட்டு அடிப்பதை கரிகாலன் வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற குழப்பம் தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே சனிக்கிழமை எபிசோட்டில் குணசேகரின் மாமா சாமி அருள் வந்து உனக்கு அழிவு காலம் வந்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார். அதோடு உனக்கு இனி தோல்வி மட்டும் தான் இருக்கும் என்றும் அவர் கூறியிருப்பதால் குணசேகரன் இந்த முறையாவது தோல்வி அடைவாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications