எதிர்நீச்சல் சீரியல் அரசு யார் தெரியுமா? நடிகை மனோரமாவிற்கும் இவருக்கும் இப்படி ஒரு பந்தமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அரசு கேரக்டரில் கிரி துவாரகேஷ் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடிகர் கிரி நடித்திருக்கிறார்.
எதிர்நீச்சல் அரசு என்று ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்படும் கிரியின் ஆரம்ப காலம் மற்றும் அவருடைய சினிமா வாழ்க்கை குறித்து பார்ப்போம்.

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனாலும் சமீப காலமாக இந்த சீரியலுக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வர தொடங்கியிருக்கிறது. காரணம் இந்த சீரியலில் ஆதிரையின் எங்கேஜ்மென்ட் நடப்பதற்கு பல மாதங்களாக ஆகின்றது. எங்கேஜ்மென்டிலே பெரும் குழப்பமும், பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திருமணம் இனி எப்போது என்று எதிர்பார்ப்பும் நடக்குமா? இல்லையா? என்ற குழப்பமும் இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் பல ரசிகர்களால் பாராட்டப்படும் மற்றும் கலாய்க்கப்படும் கேரக்டராக குணசேகரன் கேரக்டர் இருக்கிறது. அந்த குணசேகரன் கேரக்டருக்கு டஃப் கொடுத்து கேரக்டராக அரசு கேரக்டர் இருந்து வருகிறார். அந்த அரசு ஏற்கனவே சின்னத்திரையில் பல சீரியல் நடித்திருக்கிறார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த ரோஜா சீரியல் பிரியமான தோழி போன்ற சீரியலில் இவர் நடித்திருக்கிறார்.
எதிர்நீச்சல் அரசுவின் உண்மையான பெயர் கிரி துவாரகிஷ் என்பது தானாம். இவருடைய சொந்த ஊரு கர்நாடக மாநிலம் பெங்களூர் தானாம். இவருடைய அப்பா கர்நாடகத்தில் மிகப்பெரிய இயக்குனரான துவாரகிஷ். இவர் பெங்களூரில் இருந்து எட்டு வயசில் சென்னைக்கு வந்து விட்டாராம். சென்னையில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா ஸ்கூலில் தான் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து இருக்கிறார்.
நான் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்றால் அது நடிகை மனோரமாவின் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் படித்ததால் தான் என்று அரசு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். கிரியின் முதல் படத்தை அவருடைய அப்பா தான் இயக்கியினாராம். அந்த திரைப்படத்தின் பெயர் கன்னடத்தில் மஜ்னு என்ற பெயரில் வந்திருக்கிறது. அந்த திரைப்படத்தை தான் தமிழில் லவ் டுடே என்ற பெயரில் வந்திருக்கிறது. லவ் டுடே படத்தில் விஜய் நடித்தது போன்று தான் கன்னடத்தில் இவர் நடித்திருந்தாராம்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிரி அடுத்ததாக பல படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு தமிழில் ஒரு சில திரைப்படங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த திரைப்படங்களை விடவும் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல்தான் பெரிய அளவில் பிரபலம் கொடுத்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அதைத்தொடர்ந்து பல சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் அரசு கேரக்டரில் கிடைத்திருக்கும் வரவேற்பு இப்போது அமோகமாக இருந்து வருகிறது. ஆனாலும் இவர் நல்லவரா கெட்டவரா என்பது தெரியவில்லை. இனி போக போக தான் தெரியும், அரசு உடைய பிளானால் குணசேகரன் மாட்டப் போகிறாரா? அல்லது குணசேகரின் பிளானில் அரசு மாட்ட போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications