மாரிமுத்து அந்த வார்த்தையை ஏன் சொன்னாரு? விதி மதியை வென்று விட்டது?அப்பத்தா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
சென்னை: நடிகர் மாரிமுத்து நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பு காரணமாக திடீரென்று மரணம் அடைந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் சீரியலில் யதார்த்தமாக பேசிய வார்த்தை அவருடைய நிஜ வாழ்க்கையில் பழித்து விட்டது என்று சில வீடியோக்கள் நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த வார்த்தைகள் ஸ்கிரிப்டிலே இல்லாதது எதற்காக மாரிமுத்து அப்படி பேசினார் என்று தெரியவில்லை என்று அதிர்ச்சிகரமான பல உண்மைகளையும் அந்த சீரியலில் பட்டமாளாக நடிக்கும் நடிகை பாம்பே ஞானம் பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து அந்த நேரத்திற்கு தகுந்த மாதிரி வசனங்களை பேசி வந்தது தான் வழக்கம். அது பற்றி ஏற்கனவே பல பேட்டிகளில் அவரும் சொல்லி இருக்கிறார். சீரியலில் நடிப்பவர்களும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அப்பத்தாவுடைய 40% ஷேர் ஜீவானந்தம் பெயருக்கு மாற்றியதும் ஜீவானந்தம் குணசேகரின் கம்பெனிக்கு வந்து பிரச்சனை செய்து குணசேகரனை கம்பெனியில் இருந்து தூக்கி வெளியே போட்டு இருப்பார்.

அதற்குப் பிறகு ஜீவானந்தம் கொடுத்த அதிர்ச்சியால் குணசேகரனுக்கு நெஞ்சு வலி வந்திருக்கும். அவரை மருத்துவமனைக்கு கதிரும் கரிகாலனும் கொண்டு சேர்ந்து இருந்த நிலையில் தனக்கு ஒரு கையும் காலும் செயலிழந்துவிட்டது என்று குணசேகரன் நடித்துக் கொண்டிருப்பார். அப்போது ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக கிள்ளிவளவனை பார்ப்பதற்காக கதிரோடு குணசேகரன் காரில் போய்க்கொண்டிருப்பார். அப்போது எனக்கு இப்பல்லாம் "நெஞ்சு அடிக்கடி அடைக்குது. மூச்சு விட முடியல.. ஏதோ எனக்கு நடக்க போகுதுன்னு தெரியுது" என்று பேசி இருப்பார்.
அது சீரியலில் சாதாரணமாக இருந்தாலும் நேற்று அவர் அதேபோல மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. மாரிமுத்துவிற்கு அவருடைய இறப்பு முன்னாடியே தெரிந்திருக்கிறது என்று பல கூறி வந்தனர். அதோடு எதற்காக இயக்குனர் இப்படி ஒரு சீனை வைத்தார்? அதுவே மாரிமுத்துவிற்கு வினையாகிவிட்டது என்றும் கூட பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து நடிகை பாம்பே ஞானம் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது மாரிமுத்து எதற்காக அப்படி பேசினார் என்று தெரியவில்லை. காரணம் மாரிமுத்து அன்னைக்கு பேசிய வார்த்தைகள் ஸ்கிரிப்டிலே கிடையாது. அது எல்லாமே அவருடைய டயலாக் தான். அவர் வழக்கமாக இப்படித்தான் பல நேரங்களில் ஸ்கிரிப்டில் இல்லாததை பேசுவார். அந்த மாதிரி தான் அன்னைக்கும் கூட பேசி இருந்தார். ஆனால் நேற்று அவருடைய நிலைமையை பார்க்கும்போது இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வரும் போது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.
இது எல்லாமே விதி தான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் தான் மாரிமுத்து வாயில் இருந்து கூட அப்படியெல்லாம் வார்த்தை வந்து இருக்கிறது. இல்லையென்றால் டப்பிங் காலில் கமலேஷ் அங்குதானே இருந்தார். அவரிடமாவது எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லாமல் இருக்கிறது மருத்துவமனைக்கு வா என்று கூப்பிட்டு இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு போன் செய்து மனைவியை காவிரி மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கிறார்.

அதுபோல எங்களை பார்க்கும் போதெல்லாம் எப்போதும் உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுவார். ஆனால் அவர் அவருடைய உடம்பை கவனிக்க தவறி விட்டாரோ என்று எனக்கு தோன்றுகிறது. நேற்று இங்கு வந்து பார்த்த பிறகு தான் அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை ஆப்ரேஷன் செய்தது தெரியவந்தது என்று நடிகை பாம்பே ஞானம் பகிர்ந்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications