வீட்டிற்கு தெரியாமல் "எதிர்நீச்சல் நடிகை” செய்த செயல்.. செய்தியை கேட்டு ஆடிப்போன நிஜ அப்பா..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பர்ஹானா கேரக்டரில் ஜிபா ஷெரின் நடித்து வருகிறார்.
இவர்தான் சின்னத்திரையில் முதன்முதலாக முஸ்லிம் மதத்தை சார்ந்த நடிகையாக இருந்தாலும் ஹிஜாப் அணிந்து நடித்த முதல் நடிகையாவார்.

இந்த நிலையில் முதல் முறையாக இவர் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றியும், இதனால் வீட்டில் என்ன மாதிரி பிரச்சனை வந்தது என்பது பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் முதல் முறையாக சீரியலில் அறிமுகமாகி இருக்கும் ஜிபா ஷெரின் அதாவது ஜீவானந்தத்தின் பிஏவாக இருக்கும் பர்ஹானாவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் தனக்கு தன்னுடைய சீரியல் அனுபவங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி "வாசு" என்னோட ஃப்ரெண்ட் தான். என்ன அவங்க தான் நடிக்க சொல்லி அடிக்கடி கேட்டாங்க. ஆனால் ஹிஜாப் போட்டு கொண்டு இருப்பதால் நடிக்க முடியாது என்று நான் சொல்லிவிட்டேன்.
அப்படி இருக்கும் போது ஒருமுறை முஸ்லிம் பெண்ணிற்கான ரோல் இருப்பதாக வைஷ்ணவிக்கு தெரிய வந்திருக்கிறது. உடனடியாக என்னுடைய செல்போன் நம்பரை மேனேஜரிடம் கொடுத்திருக்கிறார். என்னை சூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்தனர். நான் அங்கு சென்றதும் நான் ஏற்கனவே செய்த ரீல்ஸ் வீடியோக்களை மட்டும் பார்த்த திருச்செல்வம் சார் என்னை நடிக்க உடனே ஒப்புக்கொண்டார்
நான் அந்த நேரத்தில் அவரிடம் ஹிஜாப் எல்லாம் கழட்ட முடியாது. அதோடு தான் நடிப்பேன் என்றேன் அதற்கு அவரும் என்னுடைய முடிவுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டார். முதலில் பெரிய கேமரா, லைட் செட்டப் எல்லாம் பார்த்ததும் எனக்கு பயமாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க ஆரம்பித்தேன் என்று ஜிபா கூறியிருக்கிறார்.

அதோடு நான் சீரியலில் நடித்தது என்னுடைய வீட்டிற்கு தெரியாது. என் வீட்டில் வீடியோ எல்லாம் எடுக்க கூடாதுன்னு நிறைய கட்டுப்பாடு எல்லாம் இருக்கு. நான் சீரியலின் நடிப்பேன் என்றால் கண்டிப்பாக அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வீட்டுக்கு தெரியாமல் டிக் டாக் வீடியோ செய்து இருக்கிறேன். ஆனால் அது இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில் தான் நான் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதை என்னுடைய அப்பாவிடம் அவருடைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். முதலில் அதை நம்பாத என் அப்பா நான் சீரியலில் நடித்திருக்க மாட்டேன் என்று அவர்களிடம் கூறியிருக்கிறார். பிறகு என்னிடம் கேட்டபோது நான் சீரியலில் நடித்ததை பற்றி கூறினேன். பிறகு சீரியலில் நான் நடிக்கும் கேரக்டர் தெரிந்து என்னுடைய அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார் என்றும் ஜிபா கூறியிருக்கிறார்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications