Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குணசேகரனை காப்பாற்ற களம் இறங்கும் "ரோஜா” சீரியல் அர்ஜுன்..!? எதிர்நீச்சல் சீரியலில் திடீர் டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் பட்டம்மாளின் 40% ஷேரை தன்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டார்.

அதே நேரத்தில் குணசேகரனின் சொத்துக்களில் மேலும் சில சிக்கல்களை ஜீவானந்தம் ஏற்படுத்துகிறார்.

இந்த நிலையில் குணசேகரனை காப்பாற்றுவதற்காக வழக்கறிஞராக ரோஜா சீரியலில் நடித்த அர்ஜுன் களம் இறங்குவதாக சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 Ethirneechal Serial Gunasekaran to save Roja serial Arjun

பொதுவாக சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் ஆரம்பகாலத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இணையத்தின் பயன்பாடு காரணமாக அனைவரும் எப்போதும் சீரியல் பார்க்கும் நிலைமை வந்துவிட்டது. அதனாலேயே சில சீரியல்கள் குறித்து இணையதளத்தில் அதிகமான மீம்ஸ்களும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து வருகிறது. கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் டிவியில் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கும் நிலையத்தில், அதே நேரத்தில் சன் நெக்ஸ்ட் என்ற செயலி மூலமாகவும் அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர்.

அதனாலயே எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இந்த சீரியலின் சுவாரசியத்தை மேலும் கூட்டி இருக்கிறது. ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடந்து முடிந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்ததாக பட்டம்மாளின் சொத்துக்களின் 40% ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டார்.

 Ethirneechal Serial Gunasekaran to save Roja serial Arjun

அதே நேரத்தில் ஜீவானந்தம் மற்றும் குணசேகரன் இடையே பிரச்சனையும் வெடிக்க தொடங்கி விட்டது. ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் இருந்த ஜனனி இப்போ ஜீவானந்தத்தை நேரில் பார்த்திருக்கிறார். ஆனாலும் இன்னும் இந்த பிரச்சனை எப்படி எல்லாம் போகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஜீவானந்தம் தொடர்ச்சியாக குணசேகரனுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

முதல் நாளே குணசேகரனின் கம்பெனியில் இருந்து குணசேகரனை குண்டு கட்டாக தூக்கி வெளியே போட்டு துப்பாக்கியை வைத்து மிரட்டி இருந்தார். அதே நேரத்தில் இந்த பிரச்சனையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் சொல்லலாம் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா குணசேகரனுக்கு அங்கேயும் ஜீவானந்தம் அதிர்ச்சியை கொடுத்தார்.

 Ethirneechal Serial Gunasekaran to save Roja serial Arjun

தன்னிடம் எல்லா டாக்குமென்ட்டும் சரியாக இருப்பதாகவும் அதே நேரத்தில் இவர்கள் என்னிடம் பிரச்சனை செய்கிறார்கள் என்றும் ஜீவானந்தம் குணசேகரன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்றைய புரோமோவிலும் ஆடிட்டர் வந்து புது பிரச்சனையை பற்றி சொல்ல குணசேகரனுக்கு நெஞ்சு வலி வருகிறது.

இந்த நிலையில் இணையத்தில் வேகமாக சில புகைப்படங்கள் பரவி வருகிறது அதில் நீதிமன்ற கூண்டில் குணசேகரன் கையெடுத்து கும்பிட்டபடி நிற்பது போன்றும் அவருக்கு வக்கீலாக சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் அர்ஜுன் வழக்கறிஞராக வாதாடி கொண்டிருப்பது போன்றும். அந்தப் புகைப்படத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இனி எதிர்நீச்சல் சீரியலில் அர்ஜுன் கலந்து கொள்ளப் போகிறாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏற்கனவே அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் உண்மையில் இந்த புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆனால் இதேபோன்று அர்ஜுன் குணசேகரனுக்காக வாதாடினால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். தொடர்ச்சியாக எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதுவும் நடந்தால் இன்னும் சீரியல் வேகம் எடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+