எதிர்நீச்சல் சீரியலில் மட்டுமல்ல.. கதை உருவாக காரணமாக இருந்தவங்க வீட்டில் இப்படி ஒரு பிரச்சனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் உருவாவதற்கு காரணமாக இருந்த நிஜ குடும்பம் தற்போது முதல் முறையாக பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர்.

சீரியலுடைய கதை எங்களுடையது தான். ஆனால் அந்த சீரியலில் வருவது போன்று எங்களுடைய கேரக்டர் கிடையாது என்று சில விளக்கங்களையும் அவர்கள் கொடுத்திருக்கின்றனர்.

Ethirneechal Serial Is there such a problem in the house of the people who caused the story to develop

அதே நேரத்தில் இந்த சீரியலில் வரும் பிரச்சனைகள் இப்போது எங்களுடைய வீட்டில் நிஜமாகவும் நடந்து கொண்டு வருவது தான். என்று பல ரகசியங்களை உடைத்து இருக்கின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் அடிமை தனத்திற்கு எதிராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வந்தாலும் இந்த சீரியலின் தனித்துவமான கதைக்களம் காட்சி அமைப்புகள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலின் கதை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கதையை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டது என்று இந்த சீரியலின் இயக்குனர் ஏற்கனவே பல பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து இறப்பிற்கு பிறகு இந்த சீரியல் உருவாவதற்கு காரணமாக இருந்த உண்மையான குடும்பம் பேட்டி கொடுத்திருக்கின்றனர். அதில் இந்த சீரியலில் குணசேகரன் ஆரம்பகாலத்தில் பல கஷ்டங்களை பட்டு இப்போது நல்ல நிலையில் இருப்பது போன்று தான் இந்த வீட்டின் மூத்த அண்ணன் அவ்வளவு கஷ்டங்களை பட்டாராம். ஆரம்பத்தில் தவிட்டு கடையில் வேலை பார்த்து தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தாராம். பிறகு சின்ன சின்ன வேலைகளை செய்து கல்லூரி படிப்பை முடித்து கண்டக்டராக வேலை செய்து கொண்டு இருந்தாராம்.

Ethirneechal Serial Is there such a problem in the house of the people who caused the story to develop

இவர் படித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய தந்தை இறந்து போய்விட்டதால் தம்பிமார்களை பக்கத்தில் இருக்கும் கடைகளில் விட்டு பிழைப்பை பார்த்துக்கோங்க என்று சொல்லி இருந்தார்களாம். ஆனால் என் தம்பிகள் அப்படி கஷ்டப்படக்கூடாது என்று மூத்த அண்ணன் நினைத்து பல வேலைகளை செய்து தம்பிகளை படிக்க வைத்து இன்று நல்ல நிலைமையில் வைத்திருக்கிறாராம்.

ஆனால் இந்த சீரியலில் கிட்டத்தட்ட 500 எபிசோடுகளை தாண்டி இப்போது பட்டம்மாள் தன்னிடம் இருக்கும் 40% வைத்து சொத்து பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதுபோலத்தான் இவருடைய வீட்டிலும் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று அந்த வீட்டில் மூன்றாவது தம்பி தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் இங்கே பாட்டியால் எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய கடைசி தம்பியால் தான் பிரச்சனை. ஆரம்பத்தில் என்கிட்ட அண்ணன் சொத்து வாங்கும் போது எல்லார் பெயருக்கும் வாங்கினார். ஆனால் அதிகமாக என்னுடைய கடை குட்டி தம்பி பெயரில் வாங்கி விட்டார். ஆனால் அவர் இப்போது பல பேருடைய பேச்சை கேட்டு எங்களுக்கு எதிராக மாறிக் கொண்டிருக்கிறார். எங்க வீட்டிலேயும் சொத்து பிரச்சனை காரணமாகத்தான் நாங்கள் இப்போ பிரிய வேண்டிய நிலைமையில் இருக்கிறோம் என்று அந்த பேட்டியில் மூன்றாவது தம்பி தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+