ஜீவானந்தத்தை தேடி கிராமத்துக்கு போகும் ஜனனி.. கோபத்தில் அடித்த சக்தி.. எதிர்பாராத டுவிஸ்ட்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக அவரால் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த தகவலின் படி ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்குகிறார்.
அதே நேரத்தில் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட வேண்டும் என்று குணசேகரன் அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஜனனியும் சக்தியும் கிராமத்தில் இருப்பது போன்று ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் சக்தி, ஜனனியை அடித்திருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி தான் சின்னத்திரை ரசிகர்கள் அதிகமானோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைதளத்திலும் இந்த சீரியல் பற்றிய அதிகமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்று எதிர்பார்க்க முடியாத நிலையில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஆதிரை காதல் மற்றும் திருமண விஷயத்தில் கதை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு பிறகு சீரியலில் வேகம் கூடி இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜீவானந்தம் பட்டமாள் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றியிருக்கும் நிலையில் ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்கள் எப்படி மீட்கப்பட போகிறது என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
அதே நேரத்தில் சிங்கம் போல வலம் வந்த குணசேகரன் ஜீவானந்தம் கம்பெனியை விட்டு தூக்கி வெளியே போட்டு அவமானப்படுத்தி அதிர்ச்சியையும் கொடுத்து விட்டார். அதன் காரணமாக குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். இப்போது ஒரு கையும் காலும் செயல் இழந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் ஜீவானந்தத்தை பழிவாங்க வேண்டும் என்று குணசேகரன் சென்னைக்கு கிளம்பி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஜீவானந்தம் உண்மையில் யார்..? அவருடைய கொள்கை என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக சக்தியும் ஜனனியும் முயற்சி எடுக்கின்றனர். இதில் ஏற்கனவே ஜீவானந்தத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தின் சொந்த ஊர் பற்றியும் அங்கிருக்கும் மக்கள்கள் பற்றியும் சில தகவல்களை கூறி இருந்தார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஜனனியாக நடிக்கும் மதுமிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜனனியும் கதிரும் கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டு முன்பு இருக்கின்றனர். அப்போது ஜனனி," என்னைக்காவது ஒரு நாள் நமக்கு புடிச்ச மாதிரி நம்ம லைப் மாறும்" என்று சொல்ல, அதற்க்கு சக்தி கனவுல கூட நடக்க முடியாத விஷயத்தை எவ்வளோ கான்ஃபிடண்டா சொல்றான் பாரு என்று ஜனனியின் தலையில் அடிப்பது போன்று இருக்கிறது.
தற்போது இந்த வீடியோ வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் உங்க இருவருடைய ஜோடி பொருத்தம் அழகாக இருக்கிறது என்று பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் ஜீவானந்தத்தை தேடி கிராமத்துக்கு போயாச்சு போல, இனி கதை வேகம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications