எதிர்நீச்சல் சீரியலில் “தோழர்” என்று சொல்லிக்கிட்டு இப்படி பேசலாமா..? இதை தவிர்த்து இருக்கலாமே..!?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஆனாலும் இந்த சீரியலில் சில நெருடலான காட்சிகள் மற்றும் வசனங்கள் கதைக்கு சம்பந்தம் இல்லாததாக தெரிகிறது.
அதே நேரத்தில் தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டுவதற்காக மற்றவர்களை அசிங்கப்படுத்துவது போன்று எதிர்நீச்சல் சீரியலில் சில வசனங்கள் இருக்கிறது. அதைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. காரணம் இந்த சீரியலின் கதை வீட்டுக்குள்ளேயே பெண்கள் தாங்கள் அடிமைப்படுத்தபடுகிறோம் என்பதை தெரியாமலே அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையில், அவர்கள் வெகுண்டெழுந்தால் சமூகத்தில் என்ன மாதிரி நிலைமை வரும் என்பதை குறித்து இந்த சீரியல் கதை இருந்து வருகிறது.
குணசேகரன் என்கிற பணக்காரர் உடைய வீட்டில் தன்னுடைய தம்பிமார்களுக்கு படித்த மருமகளை திருமணம் செய்து வைத்து வீட்டு வேலைகளை செய்வதற்காகவும், குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய கௌரவம் வெளியே நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதற்காக குணசேகரன் பெண்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடைசி மருமகளாக வீட்டிற்குள் வந்த ஜனனியால் குணசேகரனுக்கு மட்டுமல்லாமல் குணசேகரனை போல சமுதாயத்தில் இருக்கும் ஆண்களுக்கும் தக்க பாடம் புகுத்தும் வகையில் எதிர்நீச்சல் சீரியல் கதை ஆரம்பத்தில் பயணிக்க தொடங்கியிருந்தது. இந்த நிலையில் இப்போது பட்டமாள் சொத்து 40% ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கிறார்.

அதனால் ஜீவானந்தம் மற்றும் குணசேகரனுக்கு இடையே பிரச்சனை வெடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஜீவானந்தம் இந்த சீரியலில் தன்னை ஒரு போராளியாகவும் "தோழர்" என்று தன்னைச் சார்ந்தவர்களை அழைக்க சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஜீவானந்தம் ஒரு கம்யூனிஸ்ட்காரர் போன்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஜீவானந்தம் பட்டமாள் ஷேர் தன்னுடைய பெயருக்கு மாறியதும் குணசேகரனின் கம்பெனியில் இருந்து கொண்டு அவருடைய ஆட்களை வெளியே துரத்தி இருப்பார். அப்போது குணசேகரன் தன்னுடைய தம்பிகளோடு சேர்ந்து கம்பெனிக்கு போய் ஜீவானந்தத்திடம் பிரச்சனை செய்வார். அப்போது ஜீவானந்தம், "குணசேகரனை நீ படிக்கலல்ல அதனாலதான் இப்படி இருக்க.." என்று கூறுகிறார்.

அதுபோல இன்னொரு வசனத்திலும்," நீ படிச்சிருந்தா இந்த மாதிரி சில்லறைத்தனமான வேலைகளை செய்ய மாட்ட" என்று குணசேகரனை திட்டுகிறார். அதுதான் தற்போது சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்படும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த சீரியலில் இயக்குனர் தான் ஜீவானந்தம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஒரு இயக்குனர் புரட்சி பேசும் ஒரு நபர் இந்த சீரியலில் இருந்து கொண்டு இப்படி படிக்காதவர்களை அவமானப்படுத்துவது போன்று பேசலாமா? என்று கேள்வி ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
பொதுவாக படித்தவர்கள் மட்டும்தான் நல்லவர்களாக இருப்பார்கள் என்று ஜீவானந்தம் மூலமாக இயக்குனர் சொல்லுகிறாரா? அல்லது படிக்காதவர்கள் ரவுடிகளாகவும், ஏமாற்றுவார்களாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களா? இது எந்த வகையில் நியாயம்? இது எப்படி சரி என்று இயக்குனர் இப்படி ஒரு வசனத்தை வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதுபோல இனியாவது இந்த மாதிரி அபத்தமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.ஆனாலும் ஜீவானந்தம் குணசேகரனை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு படிக்காதவர்களை பற்றி பேசியது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இனி இதற்கான விளக்கம் வரும் எபிசோடுகளில் கொடுக்கப்படுகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications