எதிர்நீச்சல்: பர்ஹானா அணியில் சேர்ந்த ஜான்சி ராணி.. குணசேகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தை பழிவாங்க வேண்டும் என்று குணசேகரன் புது பிளான் போட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் ஜனனி ஒரு பக்கமாக ஜீவனந்தம் பற்றி விசாரித்து ஜீவானந்தத்தின் சொந்த ஊர் பற்றிய தகவலை தெரிந்து இருக்கிறார்.

இந்த நிலையில் சில நாட்களாக சீரியலில் காணாமல் இருந்த ஜான்சி ராணி பர்ஹானாவுடன் எடுத்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
சன் டிவியில் பிரபலமாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்கின்ற மாதிரி அடுத்தடுத்து திருப்பங்களும் புதுப்புது கேரக்டர்களும் அறிமுகமாக இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சிறுவயதில் குணசேகரனின் கண்ணுக்குள் கையை விட்டு ஆட்டி பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஜான்சி ராணியை சில நாட்களாக காணவில்லை.
குணசேகரனுக்கு ஜீவானந்தத்தால் பிரச்சனை ஏற்பட்ட நேரத்திலும் கரிகாலன் நான் என்னுடைய அம்மாவிடம் இதைப் பற்றி சொல்லி ஜீவானந்தத்திடம் போய் சண்டைக்குப் போக சொல்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இன்னமும் அது நடக்கவில்லை.
அதே நேரத்தில் குணசேகரனுக்கு ஜீவானந்தம் செய்த பிரச்சனைகளால் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இப்போது ஒரு கையும் காலும் செயலிழந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் ஜீவானந்தத்தை பழிவாங்க செய்ய வேண்டும் என்று சென்னையில் இருக்கும் போலீஸ் ஆபீசர் ஒருவரை பார்ப்பதற்காக குணசேகரன் சென்னைக்கு போயிருக்கிறார்.

இந்த நிலையில் பல நாட்களாக சீரியலில் வராமல் இருந்த ஜான்சி ராணி இப்போது பர்ஹானாவோடு சேர்ந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன ஆச்சு ஜான்சி ராணிக்கு ஜீவானந்தம் குரூப்போடு சேர்ந்து இருக்கிறாரே..? அப்போ ஜான்சி ராணி தான் ஜீவானந்தத்திற்கு வீட்டில் நடப்பது பற்றி சொல்லிக் கொடுத்ததா..? இது எதிர்பாராதது டுவிஸ்ட் ஆக இருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதே நேரத்தில் ஏற்கனவே இந்த சீரியல் நடிகர்கள் சூட்டிங் இல்லாத நேரத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களும் புகைப்படங்களும் எடுத்து வெளியிடுவது வழக்கம் தான். அந்த மாதிரி தான் இப்போது சூட்டிற்கு வந்திருக்கும் ஜான்சி ராணி பர்ஹானாவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து இருப்பார். எப்படியும் இனி குணசேகரனுக்கு ஆதரவாக தான் ஜான்சிராணி இருப்பார் என்றும் சில கமெண்ட்கள் வருகிறது. ஆனாலும் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications