எதிர்நீச்சல்: ரகடு பாயாக சுற்றி வந்த கதிரை பத்து பாத்திரம் கழுவ வச்சிட்டாங்க.. இனி நடக்கப் போவது?
எதிர்நீச்சல் சூட்டிங் ஸ்பாட்டில் கதிராக நடிக்கும் விபு பாத்திரம் கழுவும் வீடியோவை சக்தி வெளியிட்டிருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதிர் கேரக்டர் முரட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய அண்ணன் சொல்வது மட்டும் தான் சரி என்று நம்பிக் கொண்டிருக்கும் கதிர் தற்போது பாத்திரம் கழுவும் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
சீரியலில் சீரியஸாக இருக்கும் இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டைகளை தற்போது ரீல்ஸாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

நான்காவது இடம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் தான் கடந்த வாரத்தில் மொத்த சேனல்களின் சீரியல்களின் டாப்10 இடத்தில், ஐந்தாவது இடத்தை பிடித்த இந்த சீரியல் இந்த வாரம் நான்காவது இடத்தில் முன்னேறி இருக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு டிஆர்பி அளவு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

அண்ணனுக்கு ஏற்ற தம்பி
எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக அனைவரையும் மிரட்டி கொண்டிருப்பது குணசேகரன் என்றால் அவருக்கு அடுத்ததாக அனைவராலும் கழுவி கழுவி ஊத்தப்படும் ஒரு கேரக்டர் என்றால் அது கதிர் கேரக்டராக தான் இருக்கும். கதிர் எப்போதும் ரகடுபாயாக லுங்கியில் கிராமத்து கெட்டப்பில் வலம் வருபவர். அண்ணன் சொல் மட்டும்தான் தனக்கு வேத வாக்கு அண்ணன் சொன்னால் சரியாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பும் கேரக்டராக இருந்து வருகிறார்.

வெள்ளி திரையிலும் நடிப்பு
கதிர் கேரக்டரில் நடிகர் விபு நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் சைடு கேரக்டரில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஹன்சிகாவின் வெளிநாட்டு மாப்பிள்ளையாக நடித்திருப்பார். தற்போது இந்த சீரியலில் இவர் அதிகமாக ரசிகர்களால் திட்டப்படும் ஒரு நபராக இருக்கிறார். இந்த சீரியலில் பெண்கள் என்றால் அடிமையாக தான் இருக்க வேண்டும் வீட்டில் சாப்பாடு செய்து கொடுத்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான் அவர்களுடைய வேலை என்று ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருக்கும் கதிர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஜாலியான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஜாலியான ரீல்ஸ்
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டரை அப்படியே நிஜமான ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அலப்பரைகளை அடிக்கடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது கூட விபுராமன் அதாவது கதிர், பாத்திரம் கழுவிக் கொண்டிருக்க கரிகாலனும் சக்தியும் அருகில் நின்று கொண்டு இவரை கலாய்த்து வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

கதிரின் செயலை ரசிக்கிறாங்க
வின்னர் திரைப்படத்தில் வடிவேலு காமெடிக்கு அவர்கள் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் ரகடு பாயாக சுற்றிக் கொண்டிருந்த கதிரையும் இப்படி கடைசியில் எச்சி பாத்திரம் கழுவ வைத்து விட்டீங்க. ஒரு வழியா இது பார்ப்பதற்கு மனசுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஆதிரையின் திருமணம் யாரோடு நடக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இவர்களின் இந்த காமெடி வீடியோ தற்போது வேற லெவல் என்று பலர் பாராட்டி வருகின்றனர்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications