மறைந்த மாரிமுத்து போனில் இருந்த கடைசி வீடியோ.. இந்த உலகம் காத்துகிட்டு இருக்கு..நெகிழ வைத்த வார்த்தை
சென்னை: இயக்குனரும் பிரபல நடிகருமான இருந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அதைத்தொடர்ந்து அவர் பற்றிய நினைவுகளையும் அவர் பேசிய வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து உயிரோடு இருக்கும்போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலத்தின் சகோதரியின் பிறந்தநாளுக்கு மாரிமுத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எத்தனையோ சினிமாக்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் மாரிமுத்துவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மகள் தர்ஷினி கேரக்டரில் நடித்து வரும் மோனிஷாவின் சகோதரிக்கு மாரிமுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா. நான் மோனிஷாவுக்கு அப்பா என்றால் உனக்கும் அப்பாதான். என்னுடைய மகள் ஐஸ்வர்யாவை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அந்த மாதிரியே உங்கள் இருவரையும் எனக்கு பிடிக்கும். நீங்கள் இருவரும் அதிக அளவில் உங்கள் திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும். நீங்க இருவரும் பல போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன்.
அதுபோல இன்னும் பல போட்டிகளில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அதிகமான வெற்றிகளையும் பெற வேண்டும். உனக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாக இருக்கு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நீ அதிகமான வெளிநாட்டுக்கு சென்று உன்னுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும். குத்துச்சண்டை, வாள்வீச்சு என்று பல துறைகளில் நீயும் மோனிஷாவும் சிறந்து விளங்குகிறீர்கள். இனி வரும் எதிர்காலத்தில் உங்கள் துறையில் அதிகமான சாதனைகள் பெற வேண்டும்.

நீ சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டு போன பிறகு நான் உன்ன பத்தி நிறைய பெருமையா பேசிக்கிட்டே இருந்தேன். இந்த சின்ன வயதில் இவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பதை பார்த்து எனக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த உலகமே உன்னுடைய திறமையை கொண்டாட வேண்டும். அதற்கான நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று அந்த வீடியோவில் மாரிமுத்து பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications