எதிர்நீச்சல் டுவிஸ்ட்.. கதவை பூட்டிக்கொண்டு.. இப்படி பண்ணலாமா? குணசேகரனுக்கு ஆதரவாக ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகின்றனர்.
நேற்றைய எபிசோடில் தர்ஷினியை பார்ப்பதற்காக அவருடைய ஆண் நண்பர் வீட்டிற்கு வந்து இருப்பார். இதனால் கோபமாகி குணசேகரன் திட்டிக் கொண்டிருக்கிறார்.

குணசேகரன் செய்தது சரி என்று ஒரு தரப்பினரும், இல்லை இது தவறான கருத்து என்று இன்னொரு தரப்பினரும் கருத்து மோதல்களில் சமூக வலைத்தளத்தில் ஈடுபடுகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலேயே இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் இந்த சீரியல் இரண்டாவது இடத்திற்கு வந்திருந்தாலும் முதலிடத்தில் இருக்கும் சீரியலை விட சொற்ப புள்ளிகள் வித்தியாசம் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
பெண் அடிமை தனத்திற்கு எதிராக இந்த சீரியலில் பேசப்படுவதாலே இந்த சீரியலுக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள் கூட இந்த சீரியல் குறித்து வெளிப்படையாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் தர்ஷினியை பார்ப்பதற்காக அவருடைய நண்பன் வந்து இருப்பார். அதை பார்த்து கடுப்பான குணசேகரன் வழக்கம் போல திட்டுகிறார். மேலும் தர்ஷினியின் நண்பரையும் இது யார் வீடு என்று தெரியுமா? நீ எப்படி ஒரு பொம்பள புள்ளைய பார்ப்பதற்காக வீட்டுக்கே வருவியா? என்று திட்டுகிறார்.
அதே நேரத்தில் தர்ஷினி குணசேகரன் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவருடைய நண்பரை கையைப் பிடித்து கூப்பிட்டு தன்னுடைய அறைக்கு சென்று இருவரும் லேப்டாப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். குணசேகரனிடம் அவன் இன்னைக்கு எக்ஸாம் இருக்கு அதுக்கு நோட்ஸ் வாங்குவதற்காக தான் வந்திருக்கிறான் என்று தர்ஷினி கூறி இருந்தாலும் கதவை பூட்டிக்கொண்டு உள்ளிருந்து படிப்பதை பார்த்து கடுப்பாக குணசேகரன் மீண்டும் மேலே வந்து திட்டி விட்டார்.

அதற்கு ஈஸ்வரியின் முதலாக வீட்டில் இருக்கும் மொத்த மருமகள்களும் தர்ஷினிக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கின்றனர். தப்பு பண்றவங்க எதுக்காக நம்ம வீட்டுக்கே வரணும். நம்ம குழந்தைகளை நாம தானே நம்பணும் இப்படி அசிங்கமா பேசாதீங்க என்று ஈஸ்வரி குணசேகரனை எதிர்த்து பேசுகிறார். இந்த நிலையில் குணசேகரன் படிக்கிறவங்க எதுக்கு கதவை பூட்டிக்கிட்டு படிக்கணும். நானும் இந்த வயசு எல்லாம் கடந்து தான் வந்து இருக்கேன். இந்த வயசுல பசங்க என்ன மாதிரி புத்தியில் இருப்பார்கள் என்று எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.
அதற்கு ஈஸ்வரி உங்கள மாதிரி எல்லாரையும் நினைக்காதீங்க என்று திட்டுகிறார். அதைத் தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் கூட தர்ஷினியை குணசேகரன் திட்டுவதால் இந்த மாதிரி காட்டுமிராண்டிங்க இடத்துக்கு நான் இவனை வர சொன்னது தப்புதான் என்று பேசுகிறார். தற்போது இது குறித்துதான் சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு தந்தையை குழந்தை இப்படி பேசலாமா? என்று ஒரு சில கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதோடு சிலர் என்னதான் இருந்தாலும் குணசேகரன் சொல்லுவதிலும் நியாயம் இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் 2k கிட்ஸ் பலர் வாழ்க்கையை அவசர அவசரமாகவே வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நமக்கு பிள்ளைகள் என்றாலும் அவர்களுக்கும், வாழ்க்கையை புரிய வைக்க வேண்டும்.

கதவை பூட்டிக் கொண்டுதான் படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே? ஹாலில் இருந்து படிக்கலாமே? வீட்டில் ஹாலில் அனைத்தும் மருமகள்களும் நிற்கும் போது வீட்டுக்குள்ளே இவர்கள் கதவை பூட்டிக் கொண்டு எதற்காக படிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கின்றனர்.அதுக்கு இன்னொரு தரப்பினர் இதில் என்ன இருக்கிறது?
பொதுவாக இப்போதுள்ள குழந்தைகளிடம் பலர் மனம் விட்டு பேசுவதே கிடையாது. அதனால் பல குழந்தைகள் வழி மாறி போகின்றனர். இதை என்னைக்காவது குணசேகரன் செய்திருக்கிறாரா? அது செய்ததே கிடையாது. அப்புறம் எப்படி இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியும். இதே போலத்தான் 90ஸ் கிட்ஸ் பலருடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்று சிலர் தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து இருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு சிலர் நாங்களும் எங்களுடைய சின்ன வயதில் இப்படித்தான் வாழ்ந்திட்டு இருந்தோம். ஒரு கிளாஸில் நல்லா படிக்கிற பொண்ணு கிட்ட டவுட்டு என்று பேசினாலே அந்த காலத்தில அந்தாக்கள் என்ன எதுன்னு கேட்காம போட்டு அடிச்சி, விலாசி இருக்காங்க. ஏன் பையன் கிட்ட உன்னால டவுட் கேட்க முடியாதா? என்று சிலர் கேக்குறாங்க.

ஆனால் நம்ம கூட சேர்ந்த பசங்க எல்லாமே நம்மள மாதிரி தானே இருப்பாங்க.. அப்புறம் எப்படி நம்ம அவங்க கிட்ட டவுட் கேட்க முடியும்? அதனாலதான் நாங்க பொண்ணு கிட்ட பேசினா அந்த காலத்துல பெல்டால் எல்லாம் அடி வாங்கி இருக்கோம். இது ஒரு தவறான செயல் என்றும் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் 90ஸ் கிட்ஸ் பலருடைய அப்பா அம்மா பல விஷயங்களை எதார்த்தத்தோடு சொல்லி புரிய வைத்ததால் தான் அவர்கள் வாழ்க்கையில் பக்குவப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு பிரீடம் கொடுக்கிறோம் என்கிற பெயரில் குழந்தைகளை நாம் தான் கெடுத்து வைக்கிறோம். ஆளுக்கு ஒரு போனும் லேப்டாப்போடு என்ன வேணாலும் பண்ணலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டனர்.
எதிர்நீச்சல் சீரியல் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக இருக்கிறது சரிதான். ஆனால் தற்போது உள்ள நடைமுறைக்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டும். அப்பா தான் கரடு முரடான ஆளாக இருக்கிறார் என்றால், ஈஸ்வரி தன்னுடைய குழந்தைகளிடம் பாசமாக தானே இருக்கிறார்..? அப்போ ஈஸ்வரி முன்னிலையில் அந்த குழந்தை படிக்கலாமே..? எதற்காக கதவை பூட்டிக்கொண்டு தனியாக போய் இருக்க வேண்டும். இதை பார்க்கும் குழந்தைகளும் நாளைக்கு இதே போல தான் எதிர்த்து பேசுவார்கள் என்றும் இன்னொரு தரப்பினர் தங்களுடைய கருத்துக்களை எடுத்து கூறுகின்றனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications