ஜீ தமிழுக்கு அடுத்தடுத்து வந்த எதிர்நீச்சல் பிரபலங்கள்.. கரிகாலனை தொடர்ந்து ஜனனியும்.. செம அப்டேட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முக்கியமான முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒவ்வொன்றிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சேனல் நிர்வாகமும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது. அந்த வகையில் அடுத்தடுத்து பல புதிய சீரியல்கள் ஒளிப்பரப்பாக உள்ளன, அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய எதிர் நீச்சல் சீரியல் பிரபலங்கள் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளனர்.
ஆமாம் கரிகாலன் வேடத்தில் நடித்த விமல் கார்த்திகை தீபம் சீரியலில் ரம்யாவுக்கு கார்த்திக் ஏற்பாடு செய்த மாப்பிள்ளையாக நடிக்க உள்ளார், இவரது காட்சிகள் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
அதே போல் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மதுமிதா ஜீ தமிழில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய சீரியலின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே ஜீ தமிழில் ஒரு சில சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவை எட்டி இருக்கும் நிலையில் அந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் மதுமிதா நடிக்கும் புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறதா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்திரா சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் மேலும் ஜீ தமிழில் புதிய சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications