வாட் ஜூம்கா.. இது எதிர்நீச்சல் ஜனனியா? என்ன ஸ்டெப்பு.. மிரண்ட ரசிகர்கள்.. இவருக்கு இதுவும் தெரியுமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை மதுமிதா ஜனனி கேரக்டரில் நடித்து வருகிறார்.
முதல்முறையாக தமிழ் சீரியலில் நடிகை மதுமிதா அறிமுகமாகி இருக்கிறார். இவர் கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுமிதா வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தற்போது சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்தாலும் அதுவும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து எதிர்நீச்சல் சீரியலில் வந்து கொண்டிருக்கிறது.
திரைப்படங்களுக்கு இணையாக காட்சி அமைப்புகளும் விறுவிறுப்பும் இருப்பதால் அதிகமான ரசிகர்களை இந்த சீரியல் கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டனர். அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை மதுமிதா நடித்து வருகிறார். அவர் இதுவரைக்கும் தமிழ் சீரியல்களில் நடிக்கவில்லை. அதனால் தான் இந்த சீரியலில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதை தொடங்கப்படும் போது இயக்குனர் திருச் செல்வம் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சையம் இல்லாத ஒரு கேரக்டராக தான் தேர்வு செய்ய வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த போது தான் மதுமிதா கிடைத்திருக்கிறார். அதனால் தான் இப்போது அவர் ஜனனியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார்.
ஜனனி அமைதியாக இருந்தாலும் தைரியமான ஒரு கேரக்டராக காட்டப்பட்டு கொண்டிருக்கிறார். தான் மட்டுமல்லாமல் தன்னை சார்ந்த பெண்களும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று ஜனனி அடுத்தடுத்த முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தற்போது குணசேகரன் சொத்தை மீட்பதற்காக ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவருடைய கிராமத்துக்கும் சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் மாடலிங்கில் பிஸியாக இருக்கும் மதுமிதா வாட் ஜூம்கா என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி அதை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதை பார்த்து அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் அவரோட சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவருடைய நெருங்கிய தோழியான வசு கேரக்டரில் நடிக்கும் வைஷ்ணவி இந்த ஸ்டெப்பு வேற லெவலில் இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications