எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு எதிராக "வழக்கு” தொடுத்த பிரபலம்.. விவாத நிகழ்ச்சியால் வந்த வினை..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார்.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களை பற்றி பேசிய வார்த்தை ஆதாரம் இல்லாமல் சொன்னது என்று பிரபலம் ஒருவர் மாரிமுத்து மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சிகள் என்ன நடந்தது? என்றும், வழக்கு தொடுத்த பிரபலம் யார்? என்ன காரணம் சொல்லி இருக்கிறார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தற்போது அதிகமாக ரசிகர்களால் பேசப்பட்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து 2கே கிட்ஸ்களையும் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக மனதில் இடத்தை பிடித்த மாரிமுத்து ஒரு சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்து, பிறகு இயக்குனராக மாறி இப்போது நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவர் கடந்த வாரம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அந்த வாரம் ஜோதிடர்கள் VS ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அப்போது மாரிமுத்து இந்தியாவை பின்னோக்கி இழுப்பது ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புவர்களால் தான் இந்த நாடே நாசமாக போகிறது.
எந்த ஜோதிடர்களும் பிரச்சனை வருவதற்கு முன்பு அதைப் பற்றி சொல்வதில்லை. சுனாமி வருவதை பற்றி எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. அதுபோல கொரோனா வருவதைப் பற்றியும் இந்த ஜோதிடரும் சொல்லவில்லை. எல்லாம் நடந்து முடிந்த பிறகு அதைப்பற்றி பேசி என்ன பயன். அதுபோல தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் முதலமைச்சர் ஆக மாட்டார் என்று எல்லா ஜோசியக்காரனும் சொன்னான்.
ஆனால் இப்போ அவர் ஜோசியர் முதலமைச்சர் ஆகிவிட்டார் என்று பல விஷயங்களை ஜோதிடர்களுக்கு எதிராக பேசியிருந்தார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் கருத்து தெரிவித்து வந்தனர். ஒரு பக்கம் மாரிமுத்துருக்கு ஆதரவாக பலர் பேசி வந்தாலும் இன்னும் ஒரு சிலர் பொது நிகழ்ச்சியில் இப்படி ஜோதிடர்களை மரியாதை இல்லாமல் பேசி இருக்கக் கூடாது என்றும், ஆதாரம் இல்லாமல் இப்படி பேசக்கூடாது என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் ஜோதிடத்திற்கு எதிராக பேசியதாக மாரிமுத்துவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுபவப்பட்டு இருக்கிறது. பழ. ஆறுமுகம் என்பவர் அனுப்பி இருக்கும் அந்த நோட்டீஸில் கடந்த 23ஆம் தேதி அன்று பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடம் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள ஜோதிடர்கள், நடிகர் மாரிமுத்து, விஜே அர்ச்சனா மற்றும் நளினி மற்றும் ஜோதிடத்தை எதிர்த்து கருத்து உடையவர்கள், பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது மாரிமுத்து ஜோதிடர்கள் அனைவரும் மன்னிக்க முடியாத குற்றவாளி என்றும் ஜோதிடர்கள் தான் இந்த இந்தியாவை பின்னோக்கி இழுத்து செல்வதற்கு முக்கியமான காரணம் என்றும் உண்மைக்கு புறம்பாக பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரம் என்று பேசியதை தொலைக்காட்சியில் பார்த்து நான் அதிர்ந்து போனேன்.

மாரிமுத்து ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரம் என்று பேசியதால் மனம் புண்பட்டது. இதனால் மாரிமுத்துவின் அவதூறு பேச்சு காலம் காலமாக பின்பற்றி வரும் ஜோதிட ஆராய்ச்சிகள் மற்றும் ஜோதிட நம்பிக்கைக்கு எதிராகவும் ஜோதிடர்கள் இந்நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்பது போல தீய எண்ணத்திலும் அவதூறு பரப்பி பேசியது மக்கள் மத்தியில் ஜோதிடம் மற்றும் ஜோதிடத்தில் மேல் உள்ள நம்பிக்கையை தீர்ந்து போகும் அளவிற்கு இருக்கிறது.
இந்த நோட்டீஸ் கண்ட 15 தினங்களுக்குள் ஜீ தமிழ் தனியார் தொலைக்காட்சியில் அவதூறு பேசியது குறித்து மாரிமுத்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications