எதிர்நீச்சல் சீரியலுக்கே என்ன ஆச்சு..? அடுத்ததாக மருத்துவமனையில் திடீரென அட்மிட் ஆன நந்தினி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிக்கும் நடிகை ஹரிப்பிரியா மருத்துவமனையில் திடீரென்று அட்மிட் ஆகி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்புதான் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் மருத்துவமனைக்கு சென்று இருந்த மாரிமுத்து அங்கேயே காலமானார். இதனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு இப்போது நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை என்பதும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி தான் சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலையே டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல இல்லை என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். எதிர்நீச்சல் சீரியலை 2கே கிட்ஸ்களையும், ஆண்களையும் கவர்வதற்கு காரணமாக இருந்தது குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து தான் என்பது பலருடைய நம்பிக்கை.
இந்த நிலையில் மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு சீரியல் கதை வேறு விதமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் நந்தினியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஹரிப்பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏறுவது போன்று இருக்கிறது. அதை பார்த்த அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சியாகி என்ன ஆச்சு எதிர்நீச்சல் சீரியலுக்கு? அடுத்தடுத்து நடிகர்களுக்கு இப்படி கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது என்று ஃபீல் பண்ணி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஹரிப்பிரியா தனக்கு என்ன ஆனது என்பது பற்றி தெளிவாக கூறவில்லை. அதோடு சில தினங்களுக்கு முன்புதான் எதிர்நீச்சல் சீரியல் அணியினர் அனைவரும் ரசிகர்கள் சந்திப்பு வைத்திருந்தனர். அதில் அலை கடலென மக்கள் குவிந்திருந்த இடத்தை பார்த்து நாங்கள் வாழ்க்கையில் பெருமையாக உணரும் தருணம் இதுதான் என்று நடிகை ஹரிப்பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோக்களை பகிர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த மகிழ்ச்சி சொல்லி ஒரு சில நாட்களிலே இவருக்கு என்ன ஆனது என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications