ஜீவானந்தத்தால் அதிர்ச்சியில் குணசேகரன்.. கதிர் மற்றும் நந்தினி செய்த செயல்.. கேள்வி கேட்கும் ஆதிரை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதை கண்டு குணசேகரன் அதிர்ச்சியில் இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஆடிட்டர் சொன்ன செய்தியை கேட்டு குணசேகரனுக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.
இந்த நிலையில் நந்தினி மற்றும் கதிர் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். ஆரம்பத்திலிருந்து இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. அதுவும் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணத்திற்கு பிறகு இந்த சீரியல் மேலும் வேகம் எடுத்து இருக்கிறது.
அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்த ஜீவானந்தத்தின் வருகை நிகழ்ந்துவிட்டது. அதை தொடர்ந்து குணசேகரனுக்கு ஜீவானந்தம் பிரச்சனையை கொடுக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஜீவானந்தம் யார் என்பதை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாத நந்தினி மற்றும் வீட்டு மருமகள்கள் ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றியதையெல்லாம் ஒரு கதையாக சொல்லி கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் யார் என்பது பற்றியும் பட்டமாளுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது பற்றியும் ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருவேளை ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலனாக இருக்கலாமோ என்று கூட எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் இனிவரும் எபிசோட்டில் விடை கிடைக்கும். இந்த நிலையில் ஜீவானந்தம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதை நினைத்து குணசேகரன் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் ஆடிட்டர் வந்து ஜீவானந்தம் செய்த செயலை பற்றி சொல்லியதை கேட்டு குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நந்தினி ஆக நடிக்கும் நடிகை ஹரிப்பிரியாவும், சக்தியாக நடிக்கும் விபூ ராமனும் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றனர்.
அதில் பாலக்காடு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா என்னும் பாடலுக்கு ஆதிரை மற்றும் கரிகாலனுக்கு முதலிரவு ஏற்பாடு செய்திருந்த அறையில் வைத்து இவர்கள் ஆட்டம் போட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கலவரத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா..? என்று கேள்வி எழுப்புகின்றனர். அதே நேரத்தில் இந்த வீடியோவிற்கு ஆதிரை, "எங்களுக்கு ரெடி பண்ணுன ரூமில் நீங்க ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா..?" என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு அதிகமான ரசிகர்கள் ஆதிரையிடம் நீங்கள் தான் அந்த அறையில் ஒன்றுமே செய்யவில்லையே. அதனால் நந்தினியும் கதிரும் சந்தோஷமாக இருந்துட்டு போகட்டுமே என்று பதில் கொடுத்திருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் அப்போ நீங்க கரிகாலனை ஏற்றுக் கொள்ள முடிவு பண்ணிட்டீங்களா? என்றும் கேள்வி கேட்டு இருக்கின்றனர். இப்படியாக இந்த கலகலப்பான வீடியோவிற்கு கமெண்ட்களும் லைக்குகளும் குவிகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications