எதிர்நீச்சல்: புதுசா அறிமுகமாகும் இயக்குனர்.. லிஸ்ட் நீண்டுகிட்டே போகுதே? இனி மாற போகுதா கதை?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏற்கனவே ஏகப்பட்ட நடிகர்கள் இருக்கின்றனர். ஆனாலும் இப்போது புதியதாக இயக்குனர் கொற்றவை இந்த சீரியலில் அறிமுகமாக இருப்பதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வன் இயக்கி வருகிறார். இந்த சீரியலின் கதை வசன கர்த்தாவாக நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார். அதோடு இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் பல நடிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த சீரியல் பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டது என்று கூறப்பட்டாலும் இப்போது இந்த சீரியலில் தொடங்கப்படும் பிரச்சனைகள் எதுவுமே முடிக்கப்படாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் மாதத்திற்கு இரண்டு நடிகர்கள் இந்த சீரியலில் புதியதாக களம் இறங்கி கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்த சில நடிகர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தேட வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த சீரியலில் குணசேகரனுக்கு எதிராக சாருலதாவின் கணவர் குடும்பம் தான் பெரிய அளவில் வில்லனாக காட்டப்பட்டது. ஆனால் இப்போது புதியது புதியதாக வில்லன்கள் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் சாருலதா குடும்பம் என்ன ஆனது என்று விடை தெரியாமல் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஜனனியின் சித்தப்பா குடும்பம், அத்தை குடும்பம் என்று பெரிய பட்டாளம் புதியதாக இறங்கி இருக்கின்றனர் இதைத்தொடர்ந்து இப்போது இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் கொற்றவை தானும் இந்த எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க இருக்கிறேன் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இந்த சீரியலில் இவர் இயக்குனராக இல்லாமல் நடிகையாக தான் நடிக்கப் போகிறாராம்.
ஆனால் என்ன கேரக்டர் என்பதை அவர் கூறவில்லை. ஏற்கனவே ஈஸ்வரி குணசேகரனை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கூறியிருப்பதால் ஈஸ்வரிக்கு உதவும் கேரக்டரில் இனி கொற்றவை நடிக்க போகிறாரா? என்று கேள்விகள் எழுகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் தர்ஷினி காணாமல் போன கேசை கண்டுபிடிக்க வந்த கொற்றவைக்கு பெரிய அளவில் பில்டப் கொடுத்து இருந்தாலும் அவரை வைத்து சீரியலில் பெரிய அளவில் முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில் இப்போது கதை மாற்றப்பட்டிருக்கிறதா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுவரைக்கும் குணசேகரன் தான் எல்லா இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை இப்போது சில மாதங்களாகவே தெரிவித்து வந்ததன் காரணமாகவோ என்னவோ கடந்த வாரத்தில் தர்ஷியின் திருமணம் நிறுத்தப்பட்டு முதல் முறையாக எதிர்நீச்சல் பெண்கள் ஜெயித்திருக்கிறார்கள்
.
ஆனாலும் அந்த லைனை அப்படியே கொண்டு போகாமல் மீண்டும் குணசேகரனுக்கு எதிராக சபதம் போட்டிருக்கும் எதிர்நீச்சல் குடும்ப பெண்கள் மற்றும் அவர்களுடைய கணவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுவது போல தான் கதை இப்போது போய்க்கொண்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது ஆனாலும் இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications