எதிர்நீச்சல்: ஈஸ்வரியிடம் நேரடியாக கேள்வி கேட்டு மோதும் சாருபாலா.. சக்தி செய்த செயல்.. செம முடிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் தேர்தலுக்கு நாமினேசன் செய்யப்போன இடத்தில் சாருலதா ஈஸ்வரியிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்.

அதனால் குணசேகரன் கோபமாக இருக்க அப்போது சக்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியை வைக்கிறார். அந்த வகையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் எஸ் கே ஆர் க்கு பதிலாக தேர்தலில் நிற்கும் சாருலதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரியை தேர்தலில் போட்டியாளராக நிறுத்துவதற்கு குணசேகரன் முடிவு செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ஈஸ்வரி கூறுகின்றார்.
பிறகு ஜனனி இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் காலேஜில் நீங்கள் பணத்துக்காகவோ, மரியாதைக்காகவோ வேலைக்கு செய்ய சேரவில்லை. பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தானே வேலைக்காக போனீங்க. அதுபோல இப்போது உங்களுக்கு பதவி கிடைத்தால் அதை வைத்து பலருக்கு உதவி செய்யலாம் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அப்படியெல்லாம் எளிதாக நம்முடைய விருப்பத்தின் படி வேலையை செய்ய இந்த குணசேகரன் குடும்பத்தினர் விடமாட்டாங்க.

நம்மளை டம்மியாக வைத்துக்கொண்டு அவர்கள் காரியம் சாதிப்பார்கள் என்று சொல்ல, அதற்கு ஜனனி அதிகாரம் உங்கள் கையில் தானே இருக்கிறது? இதுவரைக்கும் அதிகாரமும் பண வசதியோ எதுவுமே நம்மிடம் இல்லாமல் தான் நாம் அமைதியாக இருந்தோம். இப்போ நீங்கள் சுயமாக யோசிக்க கூடிய நிலைக்கு வந்து இருக்கீங்க.
இப்போ உங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாம் பலருக்கு உதவியும் செய்யலாம் நம்மளும் சுயமாக தன்மானத்தோடு இருக்கலாம் என்று அறிவுரை கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நாமினேஷன் செய்வதற்காக குணசேகரன் குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர்.
மறுபக்கத்தில் எஸ் கே ஆர் குடும்பத்தினரும் சாரலதாவோடு வந்திருக்கின்றனர். அப்போது சாருலதா இந்த தேர்தலில் நான் எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் தான் நிற்கிறேன். அதே மாதிரி என்னை எதிர்த்து போட்டியிடுகிற ஈஸ்வரி சொல்ல முடியுமா? என்று கேட்க அதற்கு ஈஸ்வரி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார்.
அதைத் தொடர்ந்து கதிர் எங்க வழியில் குறுக்க வந்ததால தான் உங்க தம்பி காலை ஒடச்சுக்கிட்டு இருக்கான் என்று சொல்ல, அதற்கு அரசு அப்படி ஆகிறதுக்து காரணம் யார் என்பது நல்லாவே தெரியும் என்று பதிலடி கொடுக்கிறார். இவ்வாறு இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும்போது சக்தி இந்தாங்க முடிவு கடைசில ஓட்டு போடறவங்க ஜெயிக்க போறாங்க, போய் வேலையை பாருங்க என்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் ஈஸ்வரியோடு சேர்ந்து அந்த வீட்டு மருமகள்கள் முன்னேற வேண்டும் என்பது சார்லதாவின் விருப்பமாக இருக்கிறது. இப்போதும் கூட குணசேகருக்கு எதிராக ஜீவானந்தத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜனனி சொன்னதால் ஜீவானந்தத்தின் வழக்கறிஞராக சாருலதா சேர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இனி ஈஸ்வரி தன்னை எதிர்த்து போட்டியிடப் போவதால் சாருலதா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இனி சாருலதா பாசிட்டிவான கேரக்டரில் இருக்கிறாரா? அல்லது வில்லியாக மாறப் போகிறாரா? என்பது வரும் நாட்களில் தெரியும்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications