எதிர்நீச்சல்: இனி ஆதிபகவான் என்ட்ரி.. கலாநிதிமாறன் செலக்ட் செய்த குணசேகரன் மாரிமுத்து மட்டுமே
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு யார் குணசேகரன் கேரக்டரில் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் நேற்றைய எபிசோடில் கதை புது விதமாக பயணிக்க தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் இனி குணசேகரனுக்கு பதிலாக அவருடைய அண்ணன் மூலமாக கதை பயணிக்க இருக்கிறதாம்.
அது போல குணசேகரன் ஆக மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் எப்படி தேர்வானார் என்பது பற்றியும் அவருடைய தம்பி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்தும் பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் இந்த சீரியலில் கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகள் அதே நேரத்தில் நடிகர்களின் நடிப்பு என தனித்துவமான பல விஷயங்கள் இந்த சீரியலில் இருக்கின்றது.
அதோடு இந்த சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவும் முக்கிய காரணமாக இருந்து வந்தார். இந்த சீரியலில் வில்லனாக நடித்து வந்த மாரிமுத்து பலதரப்பட்ட மக்களின் குணங்களை எதிரொளித்து வில்லத்தனத்தையும் நக்கள் கலந்த நையாண்டித்தனத்தோடு எடுத்துக் கூறி வந்தார். இவர் வில்லனா அல்லது ஹீரோவா என்று ரசிகர்களே கன்பியூஸ் ஆகும் வகையில் இவருடைய கேரக்டர் இருந்து வந்தது.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு சற்றும் எதிர்பார்க்காத வகையில் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு காரணமாக காலமானார். இது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் இனி மாரிமுத்து கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதே நேரத்தில் இன்னொரு நடிகர் மாரிமுத்து போன்று நடிக்க முடியாது அதனால் அந்த கேரக்டர் இறப்பது போன்று காட்டிவிடுங்கள் என்று கூறி வந்தனர்.
அதுபோலவே இப்போது கதையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஈஸ்வரியை ஆரம்பத்தில் ஜீவானந்தம் காதலித்து பொண்ணு கேட்டு வந்தது போன்ற விஷயங்கள் குணசேகரனுக்கு தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவருடைய பிள்ளைகளான தர்ஷனும் தர்ஷனியும் கூட நமக்கு ஜீவானந்தமே அப்பாவாக வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தனர். ஆனால் இந்த எபிசோடுகள் எடுக்கும் போது மாரிமுத்து உயிரோடு இல்லை. ஆனாலும் அவர் ஏற்கனவே நடித்த காட்சிகளை இதற்கு தகுந்தது போல எடிட் செய்து பயன்படுத்தி இருந்தனர்.
இதனால் அவர் கோபப்பட்டு வீட்டை விட்டு போய்விட்டது போன்று காட்சிகள் அமைத்திருக்கின்றனர். இந்த நிலைகள் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இனி புதிய குணசேகரனின் அண்ணனாக வேறொரு நடிகர் களமிறங்க போகிறார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் மாரிமுத்துவை முதன்முறையாக எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிக்க தேர்வு செய்தது கலாநிதி மாறன் தானாம்.
மாரிமுத்துவின் நடிப்பை ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்த கலாநிதி மாறன் இயக்குனர் திருச்செல்வனிடம் இந்த கேரக்டருக்கு நீங்கள் மாரிமுத்துவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றாக இருக்கும் என்று அவர் சொல்லி தான் மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டதாக மாரிமுத்துவின் தம்பி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் யாராலும் மாரிமுத்துவை போன்று நடிக்க முடியாது என்பதை ரசிகர்களைப் போலவே சீரியல் தரப்பினரும் புரிந்து கொண்டு ஏற்கனவே மாரிமுத்துவிற்கு ஒரு அண்ணன் இருப்பது போன்று காட்சிகள் நேற்று வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆரம்பத்திலே குணசேகரனுக்கு பதிலாக வேலராம மூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னது போலவே அவர்தான் இன்னும் ஒரு சில வாரங்களில் "ஆதி பகவான்" என்ற கேரக்டரில் வரப்போகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் சீரியல் இன்னும் விறுவிறுப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் சீரியல் தரப்பில் இருந்து உறுதியாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. என்றாலும் இனி என்ன நடக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications